Skip to main content

நாளை இரு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வேலை நாள்

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

working day for schools in two districts

 

தொடர் மழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் விடப்படும். அந்த விடுமுறையினை ஈடு செய்யும் வகையில் வேறொரு விடுமுறை நாளன்று பள்ளிகள் செயல்படுவது வழக்கம்.

 

அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை அனைத்துப் பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவித்துள்ளனர். தொடர் மழையால் விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

சென்னையில் செவ்வாய்க் கிழமை பாட வேளையிலும் காஞ்சிபுரத்தில் வியாழன் பாட வேளையினைப் பின்பற்றியும் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.