A worker who took money on interest committed incident; Two arrested

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வட்டிக்கு பணம் வாங்கி திருப்பிச் செலுத்த காலதாமதம் ஆன நிலையில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண வசூலுக்குச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

ஆலங்குடி அருகே உள்ள சூத்தியன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 50 வயது தொழிலாளி ஒருவர் புதுக்கோட்டை விடுதி ஆசைத்தம்பி என்பவரிடம் வட்டிக்கு ரூ.20 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார். பல மாதங்களாக பணத்தையும் வட்டியும் திருப்பிக் கொடுக்காத நிலையில் பணம் வாங்கிய தொழிலாளி வீட்டிற்கு சென்ற பைனான்ஸ் ஊழியர்கள் இருவர் கையோடு அழைத்துச் சென்றுள்ளனர். அதேபோல் பணம் வாங்க ஜாமின் போட்டவரையும் அழைத்துச் சென்று மிரட்டியுள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த தொழிலாளி விஷம் குடித்தார். இதனால் மயங்கி கிடந்தவரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதல்கட்டமாக இருவரை கைது செய்துள்ளனர். மேலும் பைனான்ஸ் முதலாளி மீது வழக்குப்பதிவு செய்ய கோரியுள்ளனர் உறவினர்கள். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment