ஒகேனக்கல்லில் தடையை மீறி பரிசல் சவாரி செய்ததில் பெண் ஒருவர் நீரில் முழ்கி மாயமாகியுள்ளார். நீரில் மூழ்கியவரை தேடும் பணி நடைபெற்றுவருகிறது.

Advertisment

 Work intensive looking for a submerged woman in ohanakkal

கர்நாடகாவிலிருந்து காவிரி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக எல்லையான ஒகேனக்கல்லில் பரிசல்சவாரிக்கும், அருவில் குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடையை மீறி மனோகரன் என்பவர் இயக்கியபரிசலில் பயணித்த புதுச்சேரியை சேர்ந்த அனந்தலட்சுமி என்ற பெண் முசல்மடுவு பகுதியில் சுழலில் சிக்கி பரிசல் கவிழ்ந்ததில் நீரில் மூழ்கினார். தற்போது அவரை தேடும் பணி தீவிரமாகநடைபெற்று வருகிறது.