/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/shiv-dass-meena-art-2_0.jpg)
இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை பருவத்தில் கடந்த 17.12.2023 மற்றும் 18.12.2023 ஆகிய இரு தினங்களில் பெய்த அதிகனமழை காரணமாகத்திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பாதிப்பின் அடிப்படையில் நிவாரணத் தொகையாக 6 லட்சத்து 63 ஆயிரத்து 760 குடும்பங்களுக்கு, குடும்ப அட்டையின் அடிப்படையில் ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை மற்றும் 5 கிலோ அரிசி வழங்கவும், 14 லட்சத்து 31 ஆயிரத்து 164 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக குடும்பம் ஒன்றுக்குஆயிரம் ரூபாய் வழங்க அரசு ஆணைகள் பெறப்பட்டது. அதன் அடிப்படையில், இந்த 4 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல் ஆணையாளர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று (28.12.2023) முன்னேற்பாடுகள் கூட்டம் நடத்தி இப்பணியினை சிறப்புடன் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கினார்.
இப்பணியில் குறைபாடுகள் ஏதுமின்றி உரிய தேதிகளில் கூட்ட நெரிசல் இன்றி, அட்டைதாரர்கள் நிவாரணத் தொகை பெறும் வகையில் சுழற்சி முறையில் விநியோகம் மேற்கொள்ளும் வண்ணம், 26.12.2023 முதல் அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை பெறவேண்டிய நாள் மற்றும் நேரம் குறித்து, அட்டைதாரரின் வீடுகளில் நேரடியாகடோக்கன்கள் வழங்கப்பட்டன. 29.12.2023 முதல் தொடர்புடைய நியாய விலைக் கடைகளில் அட்டைதாரர்கள் குறிப்பிடப்பட்டநாட்களில் குறித்த நேரத்தில் குடும்ப அட்டையுடன் நியாய விலைக் கடைகளுக்கு வருகை தந்து அவர்களுக்குரிய நிவாரண உதவிகளைப் பெற்றுச் செல்லலாம்.
இந்த நிவாரணத் தொகை பொதுமக்களுக்கு எவ்வித புகாருக்கும் இடமின்றி வழங்கிடவும், புகார் எழும் சூழலில் அதனை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு நல்கிட ஏதுவாகத்திருநெல்வேலி மாவட்டத்திற்கு 93424 71314, 97865 66111 எண்களிலும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு 94864 54714, 1077 எண்களிலும், தென்காசி மாவட்டத்திற்கு 04633-290548 எண்ணிலும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 04652-231077 எண்ணிலும், கட்டுப்பாட்டு அறைகள் 26.12.2023 முதல் செயல்பட்டு வருகின்றன.
மேலும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் அலுவலகத்தில் 044-28592828 என்ற எண்ணில் கட்டுப்பாட்டு அறை அலுவலகப் பணி நேரத்தில் செயல்படும். பொதுமக்களுக்கு வெள்ள துயர் துடைக்கும் நோக்குடன் வழங்கப்படும் நிவாரண உதவிகள், பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும் நிலையில், பொதுமக்கள் இப்பணிக்கு போதுமான ஒத்துழைப்பு நல்கி நிவாரணம் பெற வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. என அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)