women incident youth including three person arrested police

Advertisment

மயிலாடுதுறையில் கடத்திச் செல்லப்பட்ட இளம்பெண்ணை மீட்ட காவல்துறையினர், இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

மயிலம்மன் நகரில் வசித்து வந்த விக்னேஸ்வரன் என்பவர் இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காததால், அவரோடு பழகுவதை அந்த பெண் நிறுத்தியுள்ளார். இருப்பினும், அந்த பெண்ணை காதலிப்பதாகக் கூறி விக்னேஸ்வரன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், கடத்தவும் முயற்சித்துள்ளார்.

இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், விக்னேஸ்வரனை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில், பெண்ணின் வீட்டிற்கு பயங்கர ஆயுதங்களுடன் சென்ற விக்னேஸ்வரன், இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றுள்ளார்.

Advertisment

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்மந்தப்பட்ட வீட்டிற்கு சென்று, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், காரை பின் தொடர்ந்து, சென்று விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே மடக்கிப் பிடித்தனர்.

தப்பியோட முயன்ற விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூன்று பேரைப் பிடித்துள்ளனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட அவரது கூட்டாளிகளைத் தேடி வருகின்றனர்.