Skip to main content

பள்ளி மாணவியைக் கடத்திச்சென்று கல்லூரி மாணவர் உள்ளிட்ட இருவர் பாலியல் வன்கொடுமை

Published on 19/11/2022 | Edited on 19/11/2022

 

 

Two men, including a college student, kidnapped and sexually assaulted a schoolgirl!


தர்மபுரி அருகே பள்ளி மாணவியைக் காட்டுக்குள் தூக்கிச்சென்று கல்லூரி மாணவரும், அவருடைய நண்பரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள மிட்டாசின்னஅள்ளியைச் சேர்ந்தவர் ராஷ்மிகா (வயது 17, பெயர் மாற்றப்பட்டுள்ளது).  இண்டூர் அருகே தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். ராஷ்மிகா தினமும் பள்ளிக்கு சைக்கிளில் சென்று வருவது வழக்கம். நவ. 16 ஆம் தேதி அன்றும் அவர் வழக்கம்போல் பள்ளிக்கு சைக்கிளில் சென்றார். பள்ளி முடிந்து மாலையில் வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் அவரைப் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் சிறுமியை வழிமறித்து காட்டுப்பகுதிக்குள் தூக்கிச்சென்றனர். அங்கு மறைவான இடத்தில் வைத்து, அவர்கள் இருவரும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 

நீண்ட நேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவருடைய பாட்டி உறவுக்காரர்களை அழைத்துக்கொண்டு பல இடங்களில் தேடிப்பார்த்தார். ராஷ்மிகா பள்ளி முடிந்து வழக்கமாக ஒரு ஒற்றையடிப் பாதை வழியாகத்தான் வீட்டுக்கு வருவார். அந்த வழியாகச் சென்ற உறவினர் ஒருவர், பாதையிலேயே அவருடைய சைக்கிள் கிடந்ததைப் பார்த்தார். அதையடுத்து, அங்குள்ள காட்டுப்பகுதியில் தேடிப்பார்த்த போது ஒரு முட்புதர் அருகே சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு உடனடியாக பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

 

மருத்துவப் பரிசோதனையில் அந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து இண்டூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், இந்தப் புகார் பென்னாகரம் மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

முதற்கட்ட விசாரணையில், இண்டூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரும், அவருடைய நண்பர் ஒருவரும் சேர்ந்துதான் பள்ளி மாணவியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

உயிரைப் பறித்த பாம்பு; தன்னார்வலருக்கு நேர்ந்த சோகம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The snake that took the life; Tragedy befell the volunteer

குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அச்சத்தை ஏற்படுத்தும் பாம்புகளைப் பிடித்து வந்த தன்னார்வலர்  பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் கடலூரில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உமர் அலி. பாம்பு பிடிக்கும் தன்னார்வலராக இருந்த உமர் அலிக்கு 2  குழந்தைகள் உள்ளனர். இதனிடையில் நேற்று இரவு பண்ருட்டி முத்தையா நகரில் வீடு ஒன்றில் பாம்பு புகுந்ததாக அவருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதே நேரம் தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உமர் அலிக்கு முன்பே அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் வீட்டில் புகுந்திருந்த நாகப்பாம்பைப் பிடித்து விட்டனர்.

பின்னர் அங்கு வந்த உமர் அலி, அந்தப் பாம்பைக் காப்புக்காட்டில் தான் விட்டு விடுவதாக வனத்துறையிடம் கேட்டுள்ளார். அப்பொழுது அவர் வைத்திருந்த பாட்டிலுக்குள் பாம்பை மாற்றிய போது உமர் அலியைப் பாம்பு கடித்தது. உடனடியாக கடலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உமர் அலி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தால் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தன்னார்வலர்கள் பாம்புகளைப் பிடிப்பதாகவும், இனி கடலூர் மாவட்டத்தில் தன்னார்வலர்கள் பாம்புகளைப் பிடிக்க அனுமதிக்கக் கூடாது எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளது.