சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நண்டு விட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட வீடுகளை சரிசெய்யததை கண்டித்து நர்மதா என்ற பெண் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நண்டுகளை விட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து நர்மதாவை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நர்மதா,
மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து நண்டு விடும் போராட்டம் நடத்தினேன். மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணாத அனைத்து அமைச்சர்கள் வீட்டிலும் சிபிஐ சோதனை நடத்த வேண்டும்.
மீனவர்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர். அந்த மீனவர்கள் பாதுக்காப்பாக வாழவேண்டும் என்பதற்காக தான் நான் இந்த இடத்தில் நண்டை கொண்டுவந்துள்ளேன். இந்த அமைச்சர் மீனவர்களுக்காக என்ன என்ன அறிவப்புகளையெல்லாம் கூறியுள்ளனரோ அந்த அறிவிப்பையெல்லாம் வேகமாக செய்யவில்லை என்றால் அடுத்த முறை ஆமை விடும் போராட்டம் நடத்துவேன் என அவர் கூறியுள்ளார்.