திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே நடுக்குப்பம் கிராமத்தில் இடி தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தென்வணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சொர்ணம். 38 வயதான சொர்ணம் நடுக்குப்பம் பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்திற்குச் சென்றுள்ளார். தொடர் மழை காரணமாக வயலில் குடை பிடித்துச்சென்றபோது இடி தாக்கியதில் சொர்ணம் நிகழ்விடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வந்தவாசி வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் உயிரிழந்த சொர்ணத்தின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விவசாய நிலத்திற்குச் சென்ற பெண் மீது இடி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.