A woman who was alone at home was beaten to death; 6 Sawaran Robbery

காஞ்சிபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ளது கட்டவாக்கம். இந்த பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்தவர் சுகுணா (65 வயது). இந்நிலையில் வீட்டிற்கு வந்த மர்ம கும்பல் சுகுணாவை இரும்பு தடியால்தாக்கி அடித்துக் கொன்றுவிட்டு அவர் கழுத்தில் அணிந்து இருந்த 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடிக் சென்றனர்.

Advertisment

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அடித்துக் கொல்லப்பட்ட மூதாட்டியின் வீட்டின் மேல் மாடியிலேயே பத்துக்கு மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் வாடகைக்கு குடி இருப்பது தெரிய வந்தது. 10 பேரில் இரண்டு வட மாநில இளைஞர்கள் தலைமறைவான நிலையில் கொலை மற்றும் திருட்டு சம்பவத்தை நிகழ்த்தியது வடமாநில இளைஞர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் மீதம் உள்ள வடமாநில இளைஞர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் அடித்து கொலை செய்யப்பட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.