The woman who tried to petition the Chief Minister in violation of security!

காவல்துறையினரின் பாதுகாப்பையும் மீறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பெண் ஒருவர் மனுகொடுக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூருக்கு சென்றிருக்கிறார். அப்போது, காரில் இருந்த முதலமைச்சர் நோக்கி ஒரு பெண் கையில் மனுவுடன் சென்றார். அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி முதலமைச்சரிடம் செல்ல அந்த பெண் முனைப்பாக இருந்தார்.

Advertisment

அதைப் பார்த்த முதலமைச்சர், காரை நிறுத்தச் சொல்லி காரின் கண்ணாடியை கீழே இறக்கிவிட்டு, அந்த பெண்ணை காருக்கு அருகே வரவழைத்து மனுவைப் பெற்றுக் கொண்டார்.