Woman molested in Chidambaram Nataraja Temple; Dikshitra disappeared

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை‌க்கு ஆளாக்கப்பட்ட நிலையில் தலைமறைவான தீட்சிதரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisment

சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு கோபுர வாயிலில் இயங்கி வரும் அன்னதான கூடத்தில் சிதம்பரம் அருகே சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கவிதா(46) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் பணி செய்து வருகிறார். தெற்கு சன்னதியில் வசிக்கும், நடராஜர் கோவிலில் தீட்சிதராகப் பணியாற்றும் மணிகண்டன் என்கிற கிருஷ்ணசாமி தீட்சிதர். கவிதா தெற்கு சன்னதியில் வேலைக்கு தனியாக வரும்போது சேலையை இழுத்து அவரது மேல் சட்டை மீது கை வைத்து பாலியல் சீண்டலில்கிருஷ்ணசாமி தீட்சிதர் ஈடுபட்டுள்ளார்.

Advertisment

இதனால் மன உளைச்சல் அடைந்த அந்தப் பெண் சிதம்பரம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரையடுத்துகாவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கிருஷ்ணசாமி தீட்சிதரை தேடி வருகின்றனர். நடராஜர் கோவில் தீட்சிதர் வேலைக்குச் சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில்ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.