Skip to main content

ரயிலில் பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு; இருவர் கைது

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

Woman robbed of thali chain in train; Two arrested

 

கடலூரில் ரயில் நிலையத்தில் வைத்து பெண்ணின் தாலி செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

 

சென்னையை அடுத்துள்ள பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா. இவர் கடந்த ஆறாம் தேதி தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுடன் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை தாம்பரத்தில் இருந்து கும்பகோணம் சென்றுள்ளார். ரயிலானது சரியாக அதிகாலை 3.30 மணியளவில் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்றது. அப்பொழுது திடீரென ரயிலில் ஏறிய மர்ம நபர்கள் இருவர் ராதிகா கழுத்தில் இருந்து தாலி சங்கிலியை பறித்து சென்றனர். இது தொடர்பாக ராதிகா அங்கிருந்த ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார்.

 

இது தொடர்பாக கடலூர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்களைப் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில் இருவரும் தாலிச் சங்கிலி பறித்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து திருடப்பட்ட தாலியைப் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உதகை மலை ரயில் சேவை ரத்து!

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Uthagai Hill train service canceled

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த சூழலில் நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இதன் எதிரொலியாக மேட்டுப்பாளையம் - உதகை இடையே இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலை ரயில் சேவை டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக உதகை மலை ரயில் சேவை வரும் டிசம்பர் 13ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. மழை காரணமாக  ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பயணிகள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை ரயில் ரத்து செய்யப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

வடலூரில் டெங்கு காய்ச்சலால் பெண் உயிரிழப்பு? போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Villagers struggle in Vadalur after a woman passed away of dengue fever

வடலூர் அருகே தென்குத்து புதுநகர், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி வெண்ணிலா என்கின்ற குமாரி(30); மணிகண்டன் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 6 மற்றும் 4 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 4ம் தேதி குமாரி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வடலூரில்  உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 7 ஆம் தேதி இரவு உயிரிழந்தார். தென்குத்து கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் உள்ள கல்லுக்குழி மணல் குவாரியில், வடலூர் நகராட்சி குப்பை கொட்டப்படுவதால் ஏராளமானவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குமாரியும் டெங்கு காய்ச்சலால் தான் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறி  குப்பை கொட்டப்படும் கல்லுக்குழி மண் குவாரி பகுதியில் திரண்டனர்.

Villagers struggle in Vadalur after a woman passed away of dengue fever

அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதனை கிராம மக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர் வடலூர் நகராட்சி குப்பை இங்கு கொட்டப்படுவதால்தான் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலமுறை குப்பை கொட்ட கூடாது எனக் கூறியும் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து இங்க குப்பைகளை கொட்டி வருகிறது. அதனால் அங்கு சென்று கேட்போம் எனக்கூறி அவர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் வடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.. அங்கு பேச்சு வார்த்தைக்கு வந்த வடலூர் சேர்மன் சிவக்குமாரை முற்றுகையிட்டு அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நகராட்சி சேர்மன் சிவகுமார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வடலூர் நகராட்சி தலைவர் சிவக்குமாரை கேட்டபோது அந்த பெண் இறந்ததுக்கும் குப்பை கொட்டியதுக்கும் சம்பந்தம் இல்லை. பல இடங்களில் டெங்கு உள்ளது. ஆனால் அந்த பெண் இறந்தது டெங்குவால் இல்லை, இனிமேல்தான் இதுகுறித்து விசாரணை செய்ய வேண்டும் எனக்கூறினார். இதுகுறித்து மருத்துவத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அந்த பெண் டெங்குவால் தான் இறந்துள்ளாரா? என சரியான விளக்கத்தை கூறினால் தான் மக்கள் மத்தியில் டெங்கு குறித்த அச்சம் போகும் எனக் கூறப்படுகிறது.