Woman passed away police searching for youth

Advertisment

காடையாம்பட்டி அருகே, குடிபோதையில் பக்கத்து வீட்டுப் பெண்ணை கல்லால் அடித்துக் கொலை செய்த வழக்கில் வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ளதும்பிப்பாடிரெட்டியூர்காலனியைச்சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய மனைவிபழனியம்மாள்(52). ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவர்களுடைய பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்சேர்வராயன். இவருடைய மகன் மாது (37).பெயிண்ட்அடிக்கும் தொழிலாளி.

சாமிநாதன்,சேர்வராயன்ஆகியோரின்குடும்பத்திற்கு இடையே நீண்ட காலமாக வழித்தடபிரச்சனைஇருந்து வருகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஜூலை 1ம் தேதி இரவு குடிபோதையில் மாது வீட்டுக்கு வந்தார். அங்கிருந்தபழனியம்மாளிடம்வழித்தடம் தொடர்பாக ஏதோ பேச, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கீழே கிடந்த கல்லை எடுத்துபழனியம்மாளின்தலையில்சரமாரியாகதாக்கினார் மாது.

Advertisment

அக்கம்பக்கத்தினர் சண்டையை விலக்கி விட்டனர். பலத்த காயம் அடைந்தபழனியம்மாளைமீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூலை 1ம் தேதி இரவு அவர் இறந்தார்.

இதுகுறித்துதீவட்டிப்பட்டிகாவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையேகாவல்துறைக்குபயந்து மாது, தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகின்றனர்.