Skip to main content

உழவர் பாதுகாப்பு திட்டத்தில் கோடிக்கணக்கில் மோசடி; பெண் ஊழியர் கைது         

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

woman employee who defrauded   Farmers' Protection Scheme of crore Arrest
அகிலா

 

திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு பிரிவாக இயங்கி வருகிறது சமூக நலத்துறை வட்டாட்சியர் அலுவலகம். இந்த அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக 2012 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்துள்ளார் அதே ஊரைச் சேர்ந்த அகிலா. இவர் சுமார் ரூ. 6.75 கோடி பணத்தை கணினி மூலம் மோசடி செய்து அவரது கணவர் வினோத், தாயார் விஜயா, சித்தப்பா மணிவண்ணன், உறவினர்கள் பாலகிருஷ்ணன் உட்பட சுமார் ஏழு பேர் வங்கி கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் செய்துள்ளதாக கண்டறியப்பட்டு அகிலா உட்பட ஐந்து பேர் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதுகுறித்து விசாரித்த போது திட்டக்குடி வட்டம் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் மனைவி பத்மினி மற்றும் பெண்ணாடத்தை சேர்ந்த மணி என்பவரது மனைவி தேவகி, இவர்கள் அவரவரின் கணவர் இறந்து போனதால் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரணத்திற்கான நிவாரணத் தொகை வழங்குமாறு விண்ணப்பித்திருந்தனர். இவர்களது விண்ணப்பம் சுமார் ஆறு மாதத்திற்கு மேல் ஆகியும் அவர்களது விண்ணப்பங்கள் முறையாக பரிசீலனை செய்து நிவாரணம் வழங்கப்படவில்லை. இது குறித்து அந்தப் பெண்கள் இருவரும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க, அது குறித்து மாவட்ட ஆட்சியர் கடலூர் கோட்டாட்சியர் கவியரசு அவர்களை விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.

 

இதையடுத்து கடலூர் கோட்டாட்சியர் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில் மேற்படி இரண்டு பெண்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இருந்தும் பத்மினி மற்றும் தேவகி ஆகியோரின் ஆதார் எண் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தனர். அதில் மேற்படி இரு நபர்களும் நான்கு மாதங்களுக்கு முன்னரே அவர்களுக்கான உதவித்தொகை அனுப்பப்பட்டுள்ளது என்று பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் இது குறித்து கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்ட பட்டியல்களையும் ஆராய்ந்து பார்த்தனர், கடலூர் மாவட்ட கருவூல அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களையும் பரிசீலனை செய்ததில் விண்ணப்பதாரர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை அவர்களுக்கு வழங்க வேண்டிய உதவித்தொகைகளை பயனாளிகள் அல்லாத வேறு நபர்களின் வங்கிக் கணக்கிற்கு  நிவாரணத் தொகை அனுப்பப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

 

woman employee who defrauded   Farmers' Protection Scheme of crore Arrest

 

இது குறித்து விசாரணை நடத்தியதில் கணினி ஆபரேட்டர் அகிலா பயனாளிகளுக்கு அரசால் வழங்கப்படும் தொகையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது போக மீதி இருக்கும் தொகைகளை அவரது வங்கி கணக்கு மற்றும் அவர் தாய் கணவர் சித்தப்பா மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட ஏழு பேர் வங்கி கணக்குகளுக்கு அந்த பணத்தை அனுப்பி மோசடி செய்துள்ளார். மேலும் அவ்வப்போது முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மாதந்தோறும் வங்கிக்கு அனுப்பப்படும் உதவித்தொகை பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் பெயருக்கு பணம் அனுப்பாமல் அந்தப் பணத்தை தனக்கு வேண்டப்பட்டவர்கள் வங்கிக் கணக்கிற்கு அவ்வப்போது அனுப்பி சுமார் 6 கோடியே 75 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளார். 

 

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனையில் அகிலா மோசடி செய்துள்ளார் என்பதும், மேலும் இதில் உழவர் பாதுகாப்பு திட்டம் முதியோர் உதவித்தொகை ஆகிய பட்டியல்களை ஆய்வு செய்வதில் மேற்படி நபர்களின் வங்கிக் கணக்கிற்கு அகிலா மூலம் பணப்பரிமாற்றம் செய்வது உறுதியாக கண்டறியப்பட்டது. இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடியில் சம்பந்தப்பட்ட அகிலா, அவர் தாயார் விஜயா, சித்தப்பா மணிவண்ணன் மற்றும் கணவர் வினோத் குமார் உறவினர்கள் செல்வராஜ், வளர்மதி, முத்துசாமி, விஜயன் ஆகியோர் பெயருக்கு பல வங்கிகளில் அந்த வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 

 

இதையடுத்து, கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றிய அகிலாவை கைது செய்து அழைத்து சென்றனர். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அகிலாவின் குடும்பத்தினரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் திட்டக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

கடலூர் மாவட்டத்திலிருந்து சென்னை மக்களுக்கு படகு, உணவு, உடைகள் அனுப்பி வைப்பு

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Sending boat, food and clothes from Cuddalore district to Chennai people

 

வடகிழக்கு பருவமழையின் காரணமாக உருவான மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையையொட்டி வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலின் தாக்கத்தினால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க இயலாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

 

தமிழக அரசு இயல்புநிலை திரும்ப பல்வேறு துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு அறிவுறுத்தியதன் அடிப்படையில், கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ள பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் கருதி 1081 கிலோ கிராம் பால்பவுடர், 21,550 பிரெட் பாக்கெட்டுகளும், 16,784 ரொட்டி பாக்கெட்டுகளும், 33,508 குடிநீர் பாட்டில்களும், 150 ஜாம் மற்றும் பண் பாக்கெட்டுகளும் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், போர்வைகள் மற்றும் துணிமனிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழையால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கியுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நீரை வெளியேற்றுவதற்கு 10 எச் பி மோட்டார் இன்ஜின் 10ம், ஒரு 40 எச்பி மோட்டார் இன்ஜினும் மேலும் மேற்பார்வையாளர், தொழில்நுட்ப உதவியாளர், இன்ஜின் இயக்குபவர் என 10 பணியாளர்கள் நீரை அகற்றும் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலிருந்து மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட 190 நபர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்பு பணிகள் மேற்கொள்ள கடலூர் மாவட்டத்திலிருந்து நான்கு படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

‘என் காதலிய என்னோட அனுப்புங்க’ -  இன்னொருவர் மனைவியை வம்புக்கு இழுத்த இளைஞர் 

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

 youth threatens to send someone else  wife with him

 

நாகப்பட்டினம் காடாம்பாடி மகாலட்சுமி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நேசமணி. இவர் மீது நாகை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் குற்ற பின்னணி உடையவர்கள் பட்டியலிலும் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் அருகே, அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ள சாலையில் கத்தியை வைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றவர்களையும், பொது மக்களையும் கத்தியால் குத்துவதற்கு பாய்ந்து சென்றதால், பொது மக்கள் அச்சமடைந்து நாலாபக்கமும் சிதறி ஓடினர்.

 

மேலும் அவ்வழியே வந்த டிராக்டரை நிறுத்தி ஓட்டுனரை குத்த பாய்ந்து ரகளையில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த வெளிப்பாளையம் போலீசார்  அவரை மடக்கி பிடிக்க முற்பட்ட போது போலீசாரையும் கத்தியால் குத்த முற்பட்டதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து தன்னை பிடித்தால் கழுத்தை அறுத்துக் கொள்வதாக பயமுறுத்திய அவர், தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்தம் வழிய, வழிய பொது மக்களையும் குத்துவதற்கு பாய்ந்தார். இதற்கு பயந்து வாகன ஓட்டிகள் வண்டிகளை நிறுத்தியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

தொடர்ந்து பொது மக்கள் உதவியுடன் மடக்கி பிடித்த போலீசார் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை எடுக்க மறுப்பு தெரிவித்து தப்பிக்க முயன்றார். அவரை துரத்தி பிடிக்க சென்ற போலீசாரை மருத்துவமனை வாசலிலே வைத்து துரத்தி துரத்தி கத்தியால் குத்த பாய்ந்த வீடியோவும் தற்போது வெளியாகி உள்ளது. இதனால் மருத்துவமனை வளாகமே பரப்பரப்பானது. 

 

தொடர்ந்து மடக்கி பிடித்த போலீசார் காவல் நிலையத்திற்கு இழுத்து சென்றனர். விசாரணையில், 6 வருடத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணிற்கு வேறு ஒருவரோடு திருமணம் ஆன நிலையில் கடந்த 2 வருடமாக அதே பெண்ணோடு தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவன் வெளிப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது விசாரணைக்கு வந்தவர், அந்த பெண்ணை தன்னோடு சேர்த்து வைக்குமாறு ரகளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

 

நாகையில் முன்னாள் காதலியும் இன்னொரு மனைவியான பெண்ணை தன்னோடு சேர்த்து வைக்க சொல்லி கத்தியால் பொது மக்கள் மற்றும் போலீசாரையும் குத்த பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்