
சிதம்பரம் அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (28). இன்று புதன்கிழமை அவரது வீட்டின் எதிர்புறத்தில் உள்ள அருண்குமார் என்பவரின் வீட்டைச் சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டு இருந்ததில் செவ்வாய்க்கிழமை இரவு அந்தப் பகுதியில் அடித்த பலத்த காற்றால் மின்கம்பி அருந்து கம்பி வேலியில் விழுந்துள்ளது.
இதனைக் கவனிக்காமல் முத்துலட்சுமி துணி காய வைக்கும் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். மயக்க நிலையில் இருந்தவர் ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தபோது ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இதுகுறித்து அண்ணாமலை நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)