Woman complains of  husband and his family asking for dowry

மதுரை நடராஜ் நகர் வீரமா முனிவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்து செல்வம். இவரது மகள் நர்மதா (வயது 21). இவருக்கும் திருச்சி மேற்கு சிந்தாமணி மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்த சுந்தரேசன் மகன் சரவணன் என்பவருக்கும் கடந்த 30-10-2022 அன்று திருமணம் நடந்தது.

Advertisment

திருமணத்தின் போது, நர்மதாவின்பெற்றோர் வரதட்சணையாக நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் வரதட்சணை கேட்டு நர்மதாவை அவரது கணவர் சரவணன், மாமியார் தேவிகா, மாமனார் சுந்தரேசன் மற்றும் விக்னேஸ்வரி ஆகியோர் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதனால் பாதிக்கப்பட்ட நர்மதா கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.