Will we come back if we go to the police station? - Annamalai question

சென்னை கொடுங்கையூரில் வீடு ஒன்றில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், திருவள்ளூர் மாவட்டம், அலமாதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, செங்குன்றத்தில் உள்ள கூட்டாளியிடம் நகைகள் இருப்பதாக கூறியதாகவும், அதைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு சென்றும் நகைகளை மீட்க முடியவில்லை என்று தெரிகிறது.

Advertisment

இந்தநிலையில், ராஜசேகரை கொடுங்கையூர் புறக்காவல் நிலையத்தில் வைத்து காலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, திடீரென உடல்நிலை சரியில்லாததால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைபெற செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த மருத்துவமனை அறிவுறுத்தலின் பேரில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில் ராஜசேகர் உயிரிழந்துவிட்டதாக, அவரை பரிசோதித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Advertisment

உயிரிழந்த ராஜசேகர் மீது கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றன. ராஜசேகரின் சந்தேக மரணம் தொடர்பான வழக்கு, சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளதோடு, மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதேபோல் நாகையில் திட்டசேரி காவல் நிலையத்தில் விசாரணை கைதியாக இருந்த சிவசுப்ரமணியன் என்ற கைதியும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

Will we come back if we go to the police station? - Annamalai question

ஏற்கனவே தமிழக டிஜிபி குறித்தும் தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் மற்றும் சட்ட ஒழுங்கு குறித்து பல்வேறு விமர்சனங்களை வைத்தவரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ராஜசேகரின் மரணம் குறித்து தெரிவித்துள்ளதாவது, ''காவல் நிலையத்திற்குச் சென்றால் உயிருடன் திரும்புவோமா மாட்டோமா என்ற அச்சத்தை காவல்துறை உருவாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் இரண்டு லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளது. நேற்று ராஜசேகர், இன்று சிவசுப்பிரமணியன்' எனத்தெரிவித்துள்ளார்.

Advertisment