Skip to main content

துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிப்பாரா? -ஜெயக்குமார் கேள்வி

Published on 23/11/2020 | Edited on 23/11/2020
fgh

 

 

மத்திய அமைச்சர அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்து சென்றார். அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு பதிலடி தந்த திமுக கண்ணாடியை பார்த்து குரங்கு பொம்மை என்ன விலை என்று கேட்பதுபோல் அமித்ஷாவின் பேச்சு இருந்ததாக காட்டமான கருத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "அரசியல் இல்லாமல் நாடு, மாநிலம், உலகம் உள்ளிட்ட எதுவும் இல்லை. அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது தவறில்லை. என் மகனை நான் அரசியலுக்கு கொண்டு வரவில்லை. ஜெயலலிதாதான் கொண்டு வந்தார். திமுகவில் வழிவழியாக வாரிசு அரசியல் இருந்து வருகிறது. அதிமுகவில் அதுபோல் இல்லை. அதிமுகவில் கொடி பிடித்தவர்கள் இன்று முதல்வராக இருக்கிறார்கள். திமுகவில் அது சாத்தியமா? துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிப்பாரா? அவரது மகனைத்தான் அறிவிப்பார்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''யார் தடுத்தாலும் சி.ஏ.ஏ கட்டாயம் அமலுக்கு வரும்'' - அமித்ஷா பேச்சு

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

"CAA will come back into force no matter who stops it" - Amit Shah's speech

 

அண்மையில் பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு வெடித்தது. இதனால் போராட்டங்களும் வெடித்தது. இந்நிலையில் யார் தடுத்தாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், 'குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்த்து வருகிறார். ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வரும். இதனை யாரும் தடுக்க முடியாது. அந்த சட்டத்தால் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பயன்பெறுவர். அனைவருக்கும் அந்த சட்டம் அதிகாரம் அளிக்கும். அரசியல் வன்முறை, ஓட்டுக்காக சமாதானப்படுத்துதல், ஊழல், சட்டவிரோத ஊடுருவல் போன்றவைக்கு அனுமதி அளித்ததன் மூலம் மேற்கு வங்கத்தை தற்போதைய மாநில அரசு சீரழித்துள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் இரண்டில் மூன்று பங்கு வாக்குகளை பெற்று பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும். வரும் தேர்தலில் மம்தா பானர்ஜிக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்' என தெரிவித்தார்.

 

 

 

Next Story

பாரத் பெயர் மாற்ற பல்லாயிரம் கோடி; பகீர் கிளப்பும் மோடி திட்டம் - விளக்குகிறார் பால்கி 

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

Balki  interview

 

மத்திய பாஜக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து நம்மோடு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் பால்கி உரையாடுகிறார்

 

இந்தியா என்கிற பெயரை பாரத் என மாற்றப்போவதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஜி20 நிகழ்வுக்கான அழைப்பிதழில் தன்னிச்சையாக 'President of Bharat' என குறிப்பிட்டது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்தது பாஜகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாம் முதலமைச்சர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாரத் என மாற்றியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்தியாவின் பெயரை மாற்றுவதால் அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவாகும். 

 

தனக்கு பெரும்பான்மை இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக யாரையும் கலந்தாலோசிக்காமல் இவ்வாறு நடந்துகொள்வது தவறானது. பெயரை மாற்றும் நடவடிக்கையில் அரசு ஈடுபடுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. இந்தியாவின் பெயரை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கூட்டியுள்ள சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் யாரும் எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என்று சொல்கிறார்கள். முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமான நடைமுறை இது. 

 

இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று நம்மால் சொல்ல முடியாவிட்டாலும், இவர்களுடைய செயல்பாடுகள் அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அனைத்து கட்சிகளுடனும் விவாதிக்கப்பட்டதா? இந்திய அரசுக்கு இது சரியான நடைமுறை தானா? பொது சிவில் சட்டம் மூலம் மதச்சார்பின்மையை சிதைக்க இந்த அரசு நினைக்கிறது. இந்த இரண்டு அஜெண்டாக்களையும் வைத்துக்கொண்டு தான் இந்த சிறப்பு கூட்டத்தை இவர்கள் கூட்டுகிறார்கள். 

 

அதிபர் முறைக்கு வழிவகுக்கும் வேலையைத்தான் இவர்கள் செய்கிறார்கள். அதானியின் பினாமிகளின் மூலம் வெளிநாட்டில் பல நூறு கோடிகள் முதலீடு செய்யப்படுகின்றன. அந்த ஊழலுக்கு இந்த அரசு துணைபோகிறது. கற்பனை மூலதனம் மூலமாக முதலீடு செய்து, வரைமுறையற்ற உயரிய லாபம் பெறும் வேலைகளில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதானிக்கு தொடர்ந்து பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது இந்த அரசு. அதானிக்கு துணையாக இருப்பவர்களுக்கு உயர்ந்த அரசுப் பதவிகளை வழங்குகிறது.