Skip to main content

உடனடியாக நீக்கப்படுவார்கள்...?  எச்சரித்த ரஜினிகாந்த்!

Published on 19/12/2020 | Edited on 19/12/2020

 

 Will be removed immediately ...? Rajinikanth warned!

 

2017-ஆம் ஆண்டு கட்சித் தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்ததற்குப் பின், 2020-ன் இறுதி மாதமான டிசம்பர் 31-ல் கட்சியை அறிவிப்பதற்கான தேதியை அறிவிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுன மூர்த்தி ஆகியோரை முக்கிய நிர்வாகிகளாகவும் அறிவித்திருந்தார்.

 

இந்நிலையில், தற்பொழுது டிசம்பர் மாதம், இறுதியை நெருங்கி வருவதால் கட்சி அறிவிப்பு மற்றும் கட்சியின் அடிப்படை கட்டமைப்பு மேற்பார்வைகளை ரஜினிகாந்த் துரிதப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளன. நேற்று முன்தினம் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோனை மேற்கொண்ட தமிழருவி மணியன், ரஜினியிடம் இருந்து வருவது மட்டுமே அதிகாரப்பூர்வமான கட்சியின் பெயர். மற்றவையெல்லாம் யூகங்கள்தான் எனக் கூறியிருந்தார்.

 

இந்நிலையில், கட்சி அறிவிப்புக்கு முன்னதாக, 25-ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை, மாவட்ட நிர்வாகிகள் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள ரஜினிகாந்த், பணம் பெற்றுக்கொண்டு பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிப்பவர்கள் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள் என எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார். 

Next Story

கட்சியை பாஜகவில் இணைத்த சரத்குமார் 

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Sarathkumar merged the party into the BJP

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

திமுக, கூட்டணி, தொகுதிப்பங்கீட்டை முடித்து வேட்பாளர் தேர்வை தீவிரப்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேமுதிக, பாமக திடீரென பாஜகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாஜக கூட்டணியில் உள்ள தமாகா, தமமுக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டி.டி.வி.தினகரனின் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியுடன் கூட்டணி வைக்கவும் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. அதேநேரம் சமத்துவ மக்கள் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அண்மையில் நடிகர் சரத்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

பாஜக-சமத்துவ மக்கள் கட்சி இடையே விரைவில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய அறிவிப்பாக தனது கட்சியான சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார் சரத்குமார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. காமராஜர் போல மோடி ஆட்சி செய்வதாக தெரிவித்துள்ள சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தது கட்சியின் முடிவல்ல என்றும் இது மக்கள் பணிக்கான தொடக்கம் என விளக்கம் அளித்துள்ளார்.