காஞ்சிபுரத்தில்குடித்துவிட்டு தகராறு செய்த கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கையில் வாழ்ந்துவந்த திருமுருகன் மற்றும் சுந்தரி தம்பதியினருக்கு இடையே அடிக்கடி குடும்பதகராறு எழுந்துவந்தது. இந்நிலையில் சுந்தரி ஆத்திரத்தில் வேலைக்கு செல்லாமல்நேற்று குடித்துவிட்டு வந்து தகராறு செய்த கணவனை தூங்கும் நேரத்தில் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.
இது பற்றி தகவலறிந்த காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் கொலை செய்த சுந்தரியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தந்தை கொலை செய்யப்பட்டும்தாய் கைது செய்யப்பட்டும்இருக்கும் நிலையில் அவர்களது இரு குழந்தைகள் ஆதரவின்றி தவிக்கின்றனர்.