The wife who beat her husband to with a brick ... Shock at the trial!

சென்னையை அடுத்த ஆவடியில் குடிபோதையில் ரகளை செய்து வந்த கணவனை மனைவி செங்கல்லால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னையை அடுத்த ஆவடி முத்தாபுதுப்பேட்டை மேட்டுத்தும்பூரில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தங்கியிருந்து வேலை செய்துவந்தனர் விழுப்புரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் விஜயலட்சுமி தம்பதியினர். கடந்த 15 வருடங்களாகத் தங்கியிருந்து வேலை செய்துவந்த இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாகத் தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி மது அருந்திவிட்டு கிருஷ்ணன் விஜயலட்சுமியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் கிருஷ்ணன் மது அருந்திவிட்டு வந்து ரகளை செய்த நிலையில் பொறுக்கமுடியாத மனைவி விஜயலட்சுமி, அருகிலிருந்த செங்கல்லை எடுத்து அடித்ததில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணன் உயிரிழந்தார்.

Advertisment

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் போன நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த முத்தாபுதுப்பேட்டை காவல்துறையினர் கிருஷ்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், மனைவி விஜயலட்சுமியைக் கைது செய்து கொலை தொடர்பாக விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் ஆவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.