Wife lost in one month after marriage!

திருச்சி உறையூர் மேலபாண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தென்னரசு. இவரது மகன் கரிகாலன் (வயது 35). இவர் 23 வயது பெண்ணை காதலித்து ஏப்ரல் மாதத்தில் திண்டுக்கல் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவரும் உறையூரில் உள்ள வீட்டில் இருந்து வந்தனர்.

Advertisment

இந்த நிலையில், மே மாதம் திருமண வரவேற்பு விழா நடத்த கரிகாலனின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வந்தனர். அதற்காக திருமண வரவேற்பு பத்திரிகை அடித்து நண்பர்களுக்கு கரிகாலன் கொடுத்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த கரிகாலனின் மனைவி திடீரென்று மாயமாகிவிட்டார். கரிகாலன்அவரை பல இடங்களில் தேடி உள்ளார். எங்கும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து கரிகாலன் மதுரை உயர்நீதிமன்றத்தில் தன்னுடைய மனைவி காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் உறையூர் போலீஸ் வழக்குப் பதிவு செய்து மாயமான கரிகாலனின் மனைவியைத் தேடி வருகின்றனர்.

Advertisment

அதேபோல்திருச்சி மாவட்டம், முசிறி, தாத்தையங்கார்பேட்டை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் அருள்குமார் (வயது 33). இவர் தனியார் லைப் இன்சூரன்ஸ் கம்பெனியில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் கடன் சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்திருக்கிறார். இந்நிலையில், அருள்குமார் வீட்டில் இருந்து கம்பெனிக்கு செல்கிறேன் என்று கூறிச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மனைவிஅருள்குமார் பணி செய்யும் கம்பெனிக்கு சென்று பார்த்துள்ளார். ஆனால், அங்கும் அவர் அன்று வரவில்லை என்று தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து அவரது மனைவி செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.