Skip to main content

போலீசார் தாக்கியதில் முதியவர் பலி? - மனைவி புகார்!

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

Wife complains that husband passed away in police attack?

 

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலையம் பகுதியில் உள்ளது சு. பில்ராம்பட்டு கிராமம். இந்தக் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தக் கடையின் அருகே அதே ஊரைச் சேர்ந்த 67 வயது உலகநாதன் என்ற பெரியவர் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்துவந்துள்ளார். நேற்று (06.12.2021) மாலை அரகண்டநல்லூர் போலீசார் உலகநாதன் கடைக்குச்  சென்று அரசு டாஸ்மாக் கடை அருகில் பெட்டிக்கடை வைத்து நடத்தக் கூடாது எனவே கடையை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அப்போது பெரியவர் உலகநாதன், நான் இங்கு நான்கு வருடமாக கடை நடத்திவருகிறேன்.

 

அப்படியிருக்கும்போது என் கடையைத் திடீரென வந்து காலி செய்ய சொல்வது ஏன்? என்று எதிர்த்து கேள்வி கேட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கோபமடைந்த போலீசார், உலகநாதனிடம் பெட்டிக்கடையை மூடிவிட்டு, காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளனர். அப்போது போலீசாருக்கும் உலகநாதனுக்கும் வாக்குவாதம் நடந்துகொண்டிருந்த சமயத்தில் உலகநாதன் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த அவரது மனைவி ராணி மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து உலகநாதனை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் உலகநாதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அறிந்த உலகநாதன் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர், திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். தனது கணவர் இறப்பு குறித்து அவரது மனைவி ராணி விழுப்புரம் துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அதில், ‘என் கணவர் பெட்டிக்கடையில் பீடி, சிகரெட், வெற்றிலை பாக்கு, மிட்டாய், பிஸ்கட், சுண்டல், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை சிறிய அளவில் வைத்து விற்பனை செய்துவந்தார்.

 

இந்த நிலையில், நேற்று 4 போலீசார் அவரது கடைக்குச் சென்று வியாபாரம் செய்யக் கூடாது என்று மிரட்டியுள்ளனர். எனது கணவர் எதிர்த்து கேள்வி கேட்டதால் அவரை அடிக்க முயன்றனர். அதை என் கணவர் தடுத்துள்ளார். போலீசார் லத்தியால் தாக்கியதில் எனது கணவர் இறந்துவிட்டார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, எனது கணவர் இறப்புக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எனது கணவர் உயிரிழப்பிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என்று அவர் புகாரில் கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். போலீசார் தாக்குதலில் வயதான முதியவர் இறந்து போனதாக கூறி சு. பில்ராம்பட்டு கிராம மக்கள் பெரும் கோபம் கொண்டுள்ளனர். இதனால் பதற்றம் நிலவியதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; போலீசார் தீவிர விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
woman lost their life in trichy

திருச்சி கீழ தேவதானம் எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் கர்ணன் (வயது 46. ). இவரது மனைவி நித்யா (வயது 34). இவர் கடந்த ஆறு வருடங்களாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் இவருக்கு கடந்த 3 வருடங்களாக தோல்நோய் தொடர்பான பிரச்சனையும் இருந்து வந்துள்ளது. இதற்காக நித்யா சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் வாழ்க்கையில் விரக்திடைந்த நித்யா சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.