/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-6_138.jpg)
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், பகுதியைச் சேர்ந்தவர் கிருத்திகா. இவரது கணவர் ரமேஷ்குமார். இவர் திருச்சி புள்ளம்பாடி பகுதியில் கருப்பையா என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்தின்போது 27 சவரன் நகை, 6 லட்சம் சீர்வரிசை, 1 லட்சம் ரொக்கமாக பணம் என வரதட்சணையாக கொடுத்து கிருத்திகாவின் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.
இந்த நிலையில், கிருத்திகா தற்போது லால்குடி காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், திருமணம் முடிந்து தன்னுடைய கணவருடன் சில மாதங்கள் மட்டுமே வாழ முடிந்தது. அதற்கு பின் தன்னுடைய கணவரின் தாய் மற்றும் சகோதரிகள் அனைவரும் சேர்ந்து என்னிடம் வரதட்சணை வாங்கி வந்தால்தான் வாழ முடியும் என்று கூறி வீட்டில் தனியறையில் பூட்டிவைத்து சித்ரவதை செய்தனர். இது குறித்து என்னுடைய பெற்றோரிடம் கூறியும் அவர்கள் கொஞ்சம் விட்டுக்கொடுத்து வாழு என்று கூறிவிட்டனர். எனவே எனக்கு விவாகரத்து வேண்டும் என்று காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தேன். அதன்பின் என்னுடைய கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் என்னை சமாதானப்படுத்தி மீண்டும் சேர்ந்து வாழ ஆரம்பித்தோம்.
இந்த நிலையில் எங்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தன. தற்போது மீண்டும் இதேபோன்று வரதட்சணை வேண்டும் என்றும், என்னுடைய கணவர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக அந்த பெண்ணி்ன் புகைப்படத்தை காட்டி என்னை துன்புறுத்தி வருகிறார். எனவே எனக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கிருத்திகாவின் கணவர் ரமேஷ்குமாரிடம் காவல்துறையினர் விசாரைணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)