Skip to main content

நிர்மலாதேவி பிரச்சனையில் ஆளுநர் ஏன் முந்திக் கொண்டு செல்கிறார்? முத்தரசன் 

Published on 20/04/2018 | Edited on 20/04/2018
cpi


  

 கொத்தமங்கலத்தில் தமிழக அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் உள்ள சாலையை கணக்கில் சேர்த்து சாலையை சீரமைக்கவில்லை என்றால் விரைவில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் வாடிமாநகர் விழா பொது மேடையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகிகள் நினைவு தின பொதுக் கூட்டம் மாவட்டச் செயலாளர் மாதவன் தலைமையில் முன்னால் மாவட்டச் செயலாளர் செங்கோடன், ஒன்றியச் செயலாளர் சொர்ணகுமார் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. ஒன்றிய துணைச் செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். கூட்டத்தில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார்.

 

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது.. ஆலங்குடியில் இருந்து கொத்தமங்கலம் வர 20 நிமிடங்கள் போதும் ஆனால் ஒரு மணி நேரம் ஆனது. கொத்தமங்கலத்தில் ஒரு இடத்தில் உள்ள சாலையில் மரண குழிகள் இருந்ததால் காரில் வருவது சிரமமாக இருந்தது. அந்த மரண குழிகள் உள்ள சாலை கிராம கணக்கிலும் இல்லை, ஒன்றிய, மாவட்ட சாலை கணக்கிலும் இல்லை தமிழக நெடுஞ்சாலை கணக்கிலும் இல்லாமல் குண்டும் குழியுமாக உள்ளது. அந்த சாலையை விரைவில் ஏதாவது கணக்கில் சேர்த்து சீரமைக்கவில்லை என்றால் விரைவில் என் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடக்கும் என்றார்.

 

    தமிழகத்தில்  மக்களுக்கான ஆட்சி நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால் எச். ராஜாவின் பேச்சுக்களுக்கு அவரை கைது செய்திருப்பார்கள். ஏன் தமிழக அரசு பதுங்கி இருக்கிறது என்று தெரியவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடந்த நடை பயணத்தில் மக்கள் ஆதரவு நன்றாக இருந்தது. அதே ஆதரவு மனித சங்கிலி போராட்டத்திலும் இருக்கும் என்று நம்புகிறோம். பேராசிரியை நிர்மலாதேவி பிரச்சனையில் ஆளுநர் ஏன் முந்திக் கொண்டு செல்கிறார் என்பது பல கேள்விகளை எழுப்புகிறது. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அரசியல்வாதிகளுக்கும், அமைச்சர்களுக்கு துணை போகிறது. அதனால் மக்கள் நலப் பணிகள் நடக்கவில்லை என்று பேசினார். 

 

    முத்தரசன் பேசிக் கொண்டிருந்த போது அருகில் ஒரு போலிசார் செல்பொனில் பேசிக் கொண்டிருந்ததால் முத்தரசனால் . அதனால் அந்த போலிசாரை அந்த இடத்திலிருந்து தள்ளி செல்லச் சொன்னார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்களுக்கும் போலிசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் போலிசார் அங்கிருந்து வெளியேறினார்கள். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு எற்பட்டது. 

சார்ந்த செய்திகள்