Skip to main content

“திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம் அதற்காக இப்படியா?” - முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

MM

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “2015ல் மத்திய அரசு கீழடி விஷயத்தில் இதற்கு மேல் தோண்டுவதற்கு வாய்ப்பில்லை என்று சொன்னதற்கு பிறகு ஜெயலலிதா மாநில அரசாங்கத்தால் அது செய்யப்படும் என்று சொல்லி மூன்றாவது கட்டம், நான்காவது கட்டம், ஐந்தாவது கட்டம் அகழாய்வுகளை நிறைவு செய்தார். உலகத்தமிழ் மாநாடு சிகாகோவில் நடந்த பொழுது அந்த மாநாட்டிற்கு தீமே 'கீழடி என் தாய்மடி' என்று வைத்து அதன் பிறகு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முன்னெடுப்பில் உலகத்தரம் மிக்க அருங்காட்சியகம் அந்த இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் நிதி கேட்டார்.

 

மத்திய அரசு தரவில்லை. இத்தனை நிதிச் சுமையிலும் 12.5 கோடி ரூபாய் ஒதுக்கி அந்த இடத்தில் கட்டடத்திற்கு டிசைன் அப்ரூ கொடுத்து, காண்ட்ராக்டர் போட்டு 90 விழுக்காடு வேலைகள் நடந்தது. அதற்கடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு ஒரு வேலைகூட செய்யவில்லை. இப்பொழுது இந்த ஒரு வருடத்தில் கிடுகிடுவென்று வேலையை முடித்துவிட்டு எடப்பாடி பழனிசாமியின் பெயரை தாங்கிய, ஜெயலலிதாவின் பெயரை தாங்கிய அடிக்கல்களை எடுத்துவிட்டு ஏதோ எல்லாத்தையுமே திமுகதான் செய்தது போல் காட்டிக் கொள்கிறார்கள். திமுக ஸ்டிக்கர் ஒட்டுவது தப்பில்லை. ஆனால் இருக்கிற அடிக்கல் ஆவணங்களை எடுக்கக் கூடாது. அந்த இடத்தில் மீண்டும் அவர்களுடைய அடிக்கல் நாட்டிய ஆவணம் இருக்க வேண்டும்.” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்