Skip to main content

ஈவு இரக்கமின்றி 14 மாடுகளுக்கு விஷ ஊசி போட்டு கொன்றது யார் ? 

Published on 30/07/2018 | Edited on 30/07/2018
cow

 

திருச்சி மாவட்டத்தின் எல்லைப்பகுதியான தொட்டியம் தவுட்டுபாளையம் காட்டுப்புத்தூர் அருகே மாட்டு வியாபாரியின் பண்ணையில் 14 மாடுகள் மர்மமான முறையில் இறந்தது. மாடுகளை விஷ ஊசி போட்டு கொன்றது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகினறனர். 

 

தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூரை அடுத்த ஆலாம்பாளையம் புதூர் தவிட்டுப் பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் வளர்ப்பு மாடுகள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். தவிட்டுப்பாளையம் அருகே உள்ள ஆலாம்பாளையம் புதூரில் இவருக்கு சொந்தமான பண்ணையில் மாடுகளை கட்டிப்போட்டு பாதுகாப்பது வழக்கம். நைனாமலை சந்தையில் விற்பதற்காக சுமார் 16 மாடுகளை கந்தசாமி தனது பண்ணையில் கட்டிப்போட்டு பாதுகாத்து வந்தார். 

 

cow

 

இரவு மாடுகளுக்கு வைக்கோல் மற்றும் தண்ணீர் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். அடுத்த நாள் காலை வந்து பார்த்த போது ஒரு பசு உள்பட 14 கன்று குட்டிகள் இறந்து கிடந்தது. இரண்டு பசுங்கன்றுகள் உயிருக்குப் போராடிய படி கிடந்தது. இதனைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கந்தசாமி காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸபெக்டர் செந்தில்குமார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

சம்பவ இடத்திற்கு வந்த காட்டுப்புத்தூர் கால்நடை மருத்துவர்கள் முசிறி கால்நடை உதவி இயக்குநர் சையது முஸ்தபா, கால்நடை மருத்துவர் செல்வக்குமார் ஆகியோர் இறந்த மாடு மற்றும் கன்று குட்டிகளை உடற்கூறு பரிசோதனை செய்தனர். இச்சம்பவம் குறித்து கந்தசாமி கூறும்போது தொழில் போட்டி காரணமாக மாடு மற்றும் கன்றுக்குட்டிகளின் தலையில் அடித்தும், விஷ ஊசி போட்டும் கொன்றுள்ளனர். மாடுகளை இரக்கமின்றி கொன்ற மர்ம நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

பல மணிநேர போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட பசு!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
 cow that fell into a well at night was rescued after several hours of struggle

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை அடுத்த மேட்டுச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய பசுமாடு மேய்ச்சலுக்குச் சென்று விட்டு வீடு நோக்கி நேற்று இரவு 7 மணி அளவில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அதே பகுதியில் இருந்த 100 அடி உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

பசு மாடு இறந்தால் அந்த பசு மாட்டை வளர்க்கும் குடும்பத்திற்கு ஆகாது என்கிற ஒரு நம்பிக்கை கிராம மக்களிடம் உள்ளது. இந்த நம்பிக்கை மற்றும் ஒரு உயிர் தண்ணீரில் தத்தளிக்கிறதே எனப் பசு மாட்டை மீட்க முயற்சி செய்தனர். இரவு நேரம் என்பதால் கிராம மக்கள் பசு மாட்டை மீட்க முடியாமல் சிரமம் ஏற்பட்டதால் திருக்கோவிலூர் தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பசுமாட்டை கிணற்றின் மேல் கரைக்கு உயிருடன் கொண்டு வந்தனர். 

 cow that fell into a well at night was rescued after several hours of struggle

பல மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் பசு மாட்டை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு மாட்டின் உரிமையாளர் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் நன்றியைத் தெரிவித்தனர்.

Next Story

“பசுவதை செய்வோரை தலைகீழாகத் தொங்கவிடுவோம்” - அமித்ஷா பேச்சு!

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
Union Home Minister Amit Shah speech at Madhubani Bihar

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 13 ஆம் தேதி (13.05.2024) நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து, மே 20ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் பீகார் மாநிலம் மதுபானியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், “காஷ்மீர் நம்முடையதா இல்லையா?. ராஜஸ்தான் மற்றும் பீகார் மக்களுக்கும் காஷ்மீருக்கும் என்ன சம்பந்தம் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறுகிறார். கார்கே நீங்கள் 80 வயதை கடந்துள்ளீர்கள். ஆனால் உங்களால் இந்தியாவைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 ஐ அகற்றக்கூடாது என்று ராகுல் கூறினார். பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளது எனக் கூறுகிறார்கள். ஆனால் அவர்களால் ஒரு கூழாங்கல்லைக் கூட எறிய முடியாது. பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா பலமாக உள்ளது. எனவே எந்த அணுகுண்டுக்கும் பயப்படத் தேவையில்லை. மூன்றாவது முறையாக பிரதமர் மோடியை பிரதமராக்குவேன் என்று உறுதியளிக்க விரும்புகிறேன்.

பசுவதை தொடர்பான வழக்குகள் இப்பகுதியில் இருந்து அதிக அளவில் வந்துள்ளன. இது சீதா அன்னையின் பூமி. இங்கு பசுக் கடத்தலையோ, படுகொலையையோ அனுமதிக்க மாட்டோம். பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க விடுவோம். நாட்டின் எல்லையில் தீபாவளியை நமது வீரர்களுடன் கொண்டாடுகிறோம். மகாபாரதத்தைப் போலவே இருபுறமும் தெளிவான முகாம்கள் உள்ளன. ஒன்று பாண்டவர்கள் மற்றும் மற்றொன்று கௌரவர்கள்” எனப் பேசினார்.