மனிதநேய ஜனநாயக கட்சி-யின் பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி_MLA இன்று சட்டமன்றத்திற்கு சென்றபோது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கறுப்பு பேட்ஜ் அணிந்து சென்றார்.
மேலும் தூத்துக்குடியில் கொல்லப்பட்ட 13 தியாகிகளின் படம் பொறித்து "இவர்களை சுட உத்தரவிட்டது யார்"? "தியாகிகளின் ரத்தம் வீண் போகாது"! என்ற வாசகம் அடங்கிய பேனரை தூக்கிப் பிடித்து மஜக-வின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
சட்டமன்றம் கூடி, கேள்வி - பதில் நேரம் முடிந்தபிறகு, அவர் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மாத்தின் மீது பேசினார்.
அவருக்கு பிறகுதான் மாண்புமிகு உறுப்பினர்கள் தினகரன் எதிர்கட்சி தலைவர் திரு.ஸ்டாலின் , காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் K.R ராமசாமி அவர்களும் பேசினார்.
சட்டசபையில் மு.தமிமுன் அன்சாரி பேசும்போது அவை முழு அமைதி காத்தது. முதல்வர், துணை முதல்வர், எதிர்கட்சி தலைவர் உட்பட அனைவரும் கூர்ந்து கவனித்தனர்.
அவர் பேசியதாவது…
கடந்த மே மாதம் 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைப்பெற்ற போராட்டத்தில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடைப்பெற்றது. அதனால் ஜெயலலிதா உயிரைச் கொடுத்து உருவாக்கிய, இந்த அரசுக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக கருதுகிறேன்.
நேற்று தமிழக அரசு வெளியிட்ட அரசானை காலதாமதமாக வந்தது என்றாலும், அதை வரவேற்கிறேன். இதை முன்பே செய்திருந்தால் 13 உயிர்களின் இழப்பை தவிர்த்திருக்கலாம் என்பது பரவலான கருத்து.
என்ன இருந்தாலும், இந்த அரசானையை அமைச்சரவையை கூட்டி, அல்லது சட்டமன்ற தீர்மானமாக மாற்றினால் அது அந்த மக்களுக்கு நிரந்தரமாக நிம்மதியை கொடுக்கும்.
இப்போது, அங்கு நடைப்பெற்ற துப்பாக்கி சூடு சம்பந்தமாக, தமிழக அரசு உரிய நியாயமான விளக்கங்களை அளிக்கவில்லை என்பதால் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எனது கருத்தை பதிவு செய்கிறேன்.
அங்கு காவலர்கள் தாக்கப்பட்டது, வாகனங்கள் தாக்கப்பட்டது ஆகியவற்றை முதலில் இங்கு கண்டிக்கிறேன். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
1. அங்கே மக்கள் பெரும் அளவில் கூடுவது குறித்து உளவு அமைப்புகள் அரசுக்கு முறையான எச்சரிக்கையை கொடுத்தா? என அறிய விரும்புகிறேன்.
2. ஆர்ப்பாட்டக்காரர்கள் திரள்வதை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் ஏன் தடுக்கவில்லை?
3. தண்ணீரை பீச்சியடிக்கும் 'வஜ்ரா' வாகனங்களை அதிகளவில் பயன்படுத்தி அந்த கூட்டத்தை கலைத்திருக்க முடியும். உலகமெங்கும் நடைபெறும் மக்கள் போராட்டத்தை அவ்வாறுதான் கலைக்கிறார்கள். இதை BBC, CNN , AL JESIRAA, போன்ற தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம்.
4. ஆனால் விதிகளை பின்பற்றாமல், துணை தாசில்தார்கள் துப்பாக்கி சூட்டுக்கு ஆணை பிறப்பித்ததாக இன்று இந்து பத்திரிக்கையில் செய்தி வந்திருக்கிறது (பத்திரிக்கையை தூக்கி காட்டுகிறார்) இது தான் மரபா ?
5. சீருடை அணியாத காவலர்கள் துப்பாக்கியால் சுடும் காட்சிகள் பத்திரிக்கையில் வந்துருக்கிறது. தெருக்களில் சென்று கைத்துப்பாகியால் சுட யார் அனுமதி கொடுத்தது?
7. மக்கள் உணர்வுகளால் கொந்தளிக்கும் போது அவர்களை அமைதி படுத்துவதுதான் அதிகாரவர்க்கத்தின் பொறுப்பு, அவர்களை காக்கை - குறுவிகளை போன்று சுடுவது நியாமா?
என்ற கேள்விகளோடு இந்த அவையின் கவனத்தை ஈர்த்து அமர்கிறேன்.’’என்றார்.