தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ளது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு முடக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
கரோனா காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து தமிழக முதல்வரேஅறிவிப்பார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து வரும் பத்தாம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்.கரோனா பாதிப்பு தமிழகத்தில் தொடரும் நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.