What is the status of the announced projects? Chief Minister consults with department secretaries!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்துத் துறை செயலாளர்களுடன் 1 மற்றும் 2ஆம் தேதி ஆகிய இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களின் தற்போதையநிலை குறித்தும், சட்டமன்றத்தில் அறிவித்த புதிய அறிவிப்புகளின் நிலை குறித்தும் அந்தந்ததுறை செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Advertisment

முதல் நாளான இன்றைய கூட்டத்தில், நகராட்சி, நீர்வளம், நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை, தொழில்துறை, மின் துறை உள்ளிட்ட துறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை கூட்டுறவு மற்றும் உணவு, பள்ளிக் கல்வி, உயர்கல்வி, ஊரகவளர்ச்சி, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Advertisment