Skip to main content

கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் தேவையென்ன? -ஆய்வு நடத்தும் அறநிலையத்துறை அமைச்சர்!

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

What is the need of the devotees going to the temple? -The Minister of Charities conducting the study!

 

கோவில்களின் அழகு மற்றும் சிலைகள், பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றன.  உலகிலுள்ள பெரும்பாலான பழமையான கோவில்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.  தமிழகத்திலும் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்கள் உள்ளன. அவை, தமிழர்களின் வரலாறு, பண்பாடு, கட்டிடக்கலை ஆகியவற்றின் விழுமியங்களின் சான்றாக உள்ளன. அக்கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்து, புனரமைத்து, பார்போற்றும் வண்ணம் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என தமிழ்நாடு அரசு 2022-23 பட்ஜெட்டில் அறிவித்தபடி, தற்போது ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  

 

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலை ஆய்வு செய்துவிட்டு, திருக்கோவில் திருமுக்குளம் சீரமைப்பு பணிகள், திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை கையகப்படுத்துதல், மற்றும் கோவில் நிர்வாகப் பணிகள் தொடர்பாக ஸ்ரீஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர்,  கோவில் நிர்வாகிகள், மற்றும் பணியாளர்களிடம் ஆலோசனை மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

“தமிழ்நாடு அரசு,  இந்து சமய  அறநிலையத்துறையின் மூலம் திருக்கோயில்களை மேம்படுத்தவும், பக்தர்களின் வருகையை அதிகப்படுத்தவும், தேவையான வசதிகளை செய்து தருவதற்கும்,   பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள திருக்கோயில்கள் ஆய்வு செய்யப்பட்டு, திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கு நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. சட்டப்பேரவை மானிய கோரிக்கையில்,  ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை பாதுகாக்கும் வகையில் சுமார் ரூ.100 கோடியை ஒதுக்கீடு செய்து அறிவித்தபடி, தமிழகத்தில் உள்ள பழமையான திருக்கோவில்களில் அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு, திருக்கோவில்களின் தேவைகளையும், செய்ய வேண்டிய பணிகள் குறித்தும்  ஆய்வு செய்து வருகின்றனர்.

 

What is the need of the devotees going to the temple? -The Minister of Charities conducting the study!

 

அதனடிப்படையில்,  ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் உள்ள சக்தீஸ்வரன் திருக்கோவிலில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து,  திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் கலந்துகொண்டதோடு, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள வீர வசந்த ராயர் மண்டபத்தில் நடைபெறவுள்ள திருப்பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அங்குள்ள வசந்த மண்டபமும் ஆய்வு செய்யப்பட்டது.

 

தற்போது திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் ஜீயருடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  அடுத்து,  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வருகையை அதிகப்படுத்தவும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கிலும்,  நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், 12 அம்மன் திருக்கோவில்களில் திருவிளக்கு பூஜை நடத்தப்படும் எனத் தமிழக முதலமைச்சர் அறிவித்தபடி, குலசேகரபட்டினம் அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில் நடைபெறவுள்ள 108 திருவிளக்கு பூஜை தொடங்கி வைக்கப்படவுள்ளது.” என்றார்.  

 

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்கிறார் தமிழ்மூதாட்டி ஔவையார். கோவில் என்பது பண்டைய காலத்தில் ஒரு பண்பாட்டு மையமாகவே திகழ்ந்திருக்கிறது. கலை, இலக்கியம், கட்டிடக்கலை, சிற்பக்கலை, நாட்டியக்கலை எனக் கலையோடு தொடர்புடையதாகவும் கோவில்கள் உள்ளன. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என முன்னோர்கள் சொன்னதற்குப் பின்னால், விவசாயம் செய்து பிழைத்துக் கொள்ள முடியும் என்பது போன்ற வாழ்வியலும் உண்டு.

 

தமிழக அரசு மேற்கொள்ளும் கோவில் புனரமைப்பு பணிகள் மூலம் பக்தர்கள் மனம் குளிர்வதோடு, நாட்டுக்கும் நல்லது நடக்கும் என்பது பெரும்பாலானோரின்  நம்பிக்கையாக உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.