Skip to main content

சுபஸ்ரீ விவகாரத்தில் ஜக்கி என்ன செய்தார்; நக்கீரன் ஆதாரத்தைக் காட்டிய முத்தரசன்! 

Published on 04/01/2023 | Edited on 04/01/2023

 

What did Jaki do in Subhasree's case.. Mutharasan showed evidence of Nakiran!

 

கடந்த டிசம்பர் 24-27, 2022 நக்கீரன் இதழில், ‘ஈஷாவிலிருந்து மாயமான இளம்பெண்? - தவிக்கும் கணவர்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், சுபஸ்ரீ என்ற இளம்பெண் ஜக்கி ஆசிரமத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு வெளியேறியபோது, காணாமல் போனது குறித்து எழுதியிருந்தோம். தற்போது, ஜனவரி 04-06, 2023 நக்கீரன் இதழில், ‘உளவு பார்த்த சீடர்கள்! ஜக்கி நடத்திய பஞ்சாயத்து?’ என்ற தலைப்பில் விரிவான செய்தியை வெளியிட்டிருக்கிறோம். 

 

அதில் சுபஸ்ரீயின் மாமனார் சக்திவேலிடம் இது குறித்து கேட்டறிந்ததும் இடம் பெற்றிருந்தது. அதில் சக்திவேல் “மருமகள் மாயமான பின் ஜக்கியின் சீடர்கள் எங்களுடன் சேர்ந்து நாங்கள் செய்வதை நோட்டம் விட்டனர். டிசம்பர் 24 ஆம் தேதி எனது மகன் பழனிகுமாரையும் எனது பேத்தியையும் சந்தித்து சமாதானம் செய்திருக்கின்றனர். அம்மா கிடைப்பார்களா என்ற எனது பேத்தியின் கேள்விக்கு பதில் கூறாத ஜக்கி எனது மகனுக்கு ருத்ராட்ச மாலை போட்டு அனுப்பினார்” எனக் கூறினார். அவர் கூறியது மட்டுமின்றி நாமும் களத்தில் இறங்கி விசாரித்து சேகரித்த விரிவான செய்திகளை ஜனவரி 04-06 இதழில் வெளியிட்டிருக்கிறோம்.

 

இந்நிலையில் இன்று கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவை காவல்துறை மற்ற சாதாரண நிறுவனத்தில் இது மாதிரி ஏதேனும் மரணம் நிகழ்ந்தால் அந்த வழக்கை எப்படி விசாரிக்குமோ அவ்வாறு ஈஷா மையத்தின் விசாரணையில் இல்லை. 18 ஆம் தேதி பெண்ணைக் காணவில்லை. 24ஆம் தேதி கணவர் பழனிகுமாரை சாமியார் அழைத்துப் பேசியுள்ளார். ருத்ராட்ச மாலை போட்டுள்ளார்.  இது குறித்து காவல்துறை விசாரித்துள்ளதா.

 

நான் சொல்லுவதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. நான் புலனாய்வு அதிகாரி இல்லை. ஊடகங்கள் கொடுத்த செய்திகளை வைத்து தான் கூறுகிறேன். நக்கீரன் இதழில் அது வெளிவந்துள்ளது. இதை முத்தரசன் சொல்கிறார் என்றே போடுங்கள். ஜக்கி என் மீது வழக்கு பதியட்டும்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்