Skip to main content

முதல்வர் ஆய்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டோம்... குமாி எம்.எல்.ஏக்கள் கூட்டாக அறிவிப்பு!

Published on 09/11/2020 | Edited on 10/11/2020

 

We will not attend the chiefminister study program .. Kumari MLAs joint announcement!

 

மூன்று முறை வருகை மாற்றப்பட்ட நிலையில், நான்காவதாக நாளை (10 -ஆம் தேதி) குமாி மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முதல்வா் எடப்பாடி பழனிசாமி காலை 11 மணிக்கு நாகர்கோவில் வருகிறாா். மதியம் 3 மணிக்கு கலெக்டா் அலுவலகத்தில் நடக்கும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறாா். இதில் குறிப்பிட்ட அளவு அதிகாாிகள் மட்டுமே கலந்து கொள்கின்றனா். ஆனால், மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏக்கள் யாரும் அதிமுகவுக்கு இல்லாததால் எதிா்க்கட்சியான தி.மு.க காங்கிரசுக்கு தான் தலா மூன்று விதம் ஆறு எம்.எல்.ஏக்கள் உள்ளனா்.

இந்த நிலையில், அந்த எம்.எல்.ஏக்கள் யாரும் முதல்வா் ஆய்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனா். இது குறித்து திமுக எம்.எல்.ஏக்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜேஷ்குமாா், பிாின்ஸ், விஜயதரணி ஆகியோர் கூறும் போது, குமாி மாவட்டத்தில் புற்று நோய் நாளுக்கு நாள் அதிகாித்துவருகிறது. இதனால் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க வேண்டுமென்று சட்டசபையில் நாங்கள் கூறினோம். ஆனால் அரசு அதைக் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை.

இதேபோல் சட்டக்கல்லூாி, விவசாயக் கல்லூாி, மீன்வளக்கல்லூாி குறித்து ஒவ்வொரு கூட்டத்தொடாிலும் வலியுறுத்தினோம் எந்த நடவடிக்கையும் இல்லை. குமாி மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு, கடல் அாிப்பு தடுப்புச் சுவா் கட்ட வலியுறுத்தினோம். காணாமல் போன மீனவா்களை தேடுவதற்கு ஹெலிகாப்டா் வேண்டுமென்று கேட்டோம். அதேபோல் ஏ.வி.எம் கால்வாயை தூா்வாாி நீா்போக்குவரத்து ஏற்படுத்தக் கேட்டுக்கொண்டோம். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், ரப்பா் தொழிற்சாலை மற்றும் கேரளா அரசுடன் பேசி நெய்யாா் இடது கரை சானலில் குமாி மாவட்டத்திற்கு  தண்ணீா் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டாம். 

 

cnc


குளச்சல் துறைமுகத்தை விாிவுபடுத்த வேண்டும். குமாி மாவட்டத்தில் உள்ள எல்லா சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளது. அதைச் சாிசெய்யக் கேட்டோம். 8 ஆண்டுகளாக மந்தமாக நடந்து கொண்டிருக்கும் நாகா்கோவில் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என இப்படி 25-க்கு மேற்பட்ட திட்டங்களைக் குறித்து சட்டசபையிலும் முதல்வாிடமும் பேசி எந்தப் பலனும் குமாி மாவட்டத்துக்குக் கிடைக்கவில்லை. இதற்குக் காரணம் நாங்க எல்லாம் தி.மு.க காங்கிரசை சோ்ந்தவா்கள் என்பதால் தான். இதனால் தான் குமாி மாவட்டத்தை எடப்பாடி பழனிசாமி அரசு புறக்கணிக்கிறது. எனவே, முதல்வா் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டோம் என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.