Skip to main content

“முதல்வர் மற்றும் அமைச்சருக்கு மனதார நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்”-மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தலைவர்!

Published on 09/09/2021 | Edited on 09/09/2021

 

We sincerely thank the Chief Minister and the Minister

 

மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள் இனி சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுக்கலாம் என்று இன்று சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தலைவர் சேம.நாராயணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “மண்பாண்ட தொழிலாளர்கள், மண்பாண்டங்கள் செங்கல்சூளை அமைத்துக் கொள்ளச் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைத் தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் மண் எடுத்துக்கொள்ளலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டிருந்தது, நீதிமன்ற ஆணையும் பெற்றிருந்தும் கடந்த ஆட்சியாளர்கள் மண் எடுக்க அனுமதிக்காமல் அலைக்கழித்து வந்தனர்.

 

இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வாழ்வாதாரத்தை இழந்தனர். தி.மு.க ஆட்சி வந்ததும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இதுகுறித்து கடிதம் எழுதினேன். நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களை நேரில் சந்தித்து கடிதம் அளித்து நிலைமைகளை எடுத்துக் கூறினேன். எங்களின் கருத்தை நன்கு கேட்டறிந்த பின் நான் முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து நல்ல முடிவை எடுக்கிறேன் என்று கூறினார். இதேபோன்று முதலமைச்சரின் செயலாளர் சண்முகம் அவர்களையும் நேரில் சந்தித்துப் பேசி மனு அளித்தேன். அவரும் இதற்கு உரியத் தீர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறினார். எங்களின் நியாயமானக் கோரிக்கையைத் தாயுள்ளதோடு பரிசீலித்த முதலமைச்சர் அவர்கள் பாப்பிரெட்டி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு மண்பாண்டம் தயாரிக்கவும், செங்கல் சூளைகளுக்கும் மணல் எடுக்க அனுமதி கிடைப்பதில்லை என்று கவனயீர்ப்பில் கூறினார்.

 

அதற்குப்  பதிலளித்துப் பேசிய நீர்ப்பாசனம்  மற்றும் கனிமளவத்துறை அமைச்சர் துரைமுருகன், நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழல் அனுமதி பெற்று மண் பரிசோதனைக்கு பிறகே மண் எடுக்க வேண்டும் எனச் சூழல் இருந்த நிலையில் தமிழக அரசு சார்பில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அரசு சார்பில் எடுக்கப்படும் மணலுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை எனக் கடந்த ஜூலை 30ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள் விவசாயத்திற்கு மண் எடுக்கவும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று அவரின் உத்தரவுப்படி தமிழக அரசு ஒரு புதிய முடிவை எடுத்திருக்கிறது. அதன்படி 1.5 மீட்டர்க்கு கீழ் செல்லாமல் மணல் எடுப்பது கனிமவளங்களை எடுப்பது ஆகாது என்பதால் 1.5 மீட்டர் வரை மண் எடுக்கத் தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

 

எனவே மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைப்பவர்கள் விவசாயிகள்  சுற்றுச்சூழல் அனுமதியின்றி 1.5 மீட்டர் வரை மண் எடுத்துக்கொள்ளலாம். அதற்கான கட்டணத்தை அரசுக்குச் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளார். எங்களின் பல வருடக் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து ஆட்சிக்கு வந்த 125 நாட்களிலே எந்தவித சான்றிதழ் பெறாமலேயே மண் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்த முதலமைச்சர், மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு மனதார நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

துப்புரவுப் பெண் ஊழியர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட நபர்! 

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
 person who behaved rudely to the cleaning lady

மதுரை மாநகராட்சி பூங்காவும், விளையாட்டு மைதானமும்  பொன்மேனி –  ஜீவனா ஸ்கூல் எதிரில் உள்ளது. அந்த இடத்தை மாநகராட்சி பெண் பணியாளர்கள் துடைப்பத்தால் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது,  அவர்களைப் பொருட்படுத்தாமல், அந்த நபர் செல்போனில் பேசியபடியே சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தார். 

பெண் ஊழியர்கள் சத்தம்போட்டும், அவர்  காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ஒருவழியாக முடித்துவிட்டு சாவகாசமாகத்  திரும்பிய அவர், அந்த ஊழியர்களை ஒருமையில் திட்ட ஆரம்பித்தார். “நான் 20 வருஷமா இங்க வந்துட்டு இருக்கேன். எப்பவும்போல இன்னைக்கும் போனேன். என்னைச் சத்தம் போடுற அளவுக்கு நீயெல்லாம் ஒரு ஆளா?”  என்று உரத்த குரலில் மிரட்டினார்.

 person who behaved rudely to the cleaning lady
நவீன்

அப்போது, பெண் ஊழியர்களுடன் வேலை பார்த்துக்கொண்டிருந்த நவீன் “என்ன சார்.. தப்பும் பண்ணிட்டு சத்தம் போடுறீங்க? பெண்கள் இருக்கிற பக்கம் திரும்பி ஜிப்பை மாட்டுனீங்க. இதெல்லாம் சரியில்ல.” என்று கூற, அந்த நபர் மேலும் எகிற ஆரம்பித்தார். “பூங்காவுக்கு வர்றவங்க இந்த நாற்றத்தைத் தாங்குவாங்களா? துப்புரவு  வேலை பார்க்கிறவங்கன்னா.. இந்தமாதிரி ஆளுங்களுக்கு இளக்காரமா தெரியுது. கொரோனா காலத்துல உசிர மதிக்காம ரிஸ்க் எடுத்து வேலை பார்த்தோம். எங்க அருமை இவங்களுக்கு எங்கே தெரியப்போகுது?” என்று  புலம்பிய முனியம்மா தலையில் அடித்துக்கொண்டார்.

அந்த நபர் யாரென்று விசாரித்தோம். ஜீவனா ஸ்கூல் வேன் டிரைவராம்.  சொந்தமாக நான்கு வாகனங்கள் வைத்து ட்ரிப் அடிக்கிறாராம். கல் பெஞ்சில்  உட்கார்ந்திருந்த அந்த நபரிடம், சட்டத்தின் பார்வையில் நீங்கள்  நடந்துகொண்ட விதம் குற்றச்செயல்’ என்று அழுத்தமாகச் சொன்னோம்.  சுத்தத்தைப் பேணவேண்டிய இடத்தில் அசுத்தம் செய்பவர்கள்  திருந்த வேண்டும். 

Next Story

'அரசு பேருந்தில் ஏற்ற மறுப்பு'-பெண் தூய்மைப் பணியாளர்கள் தர்ணா

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
'Refusal to board government bus'-women sanitation workers dharna

தஞ்சையில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் தூய்மைப் பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுப்பதாக 50க்கும் மேற்பட்ட பெண் தூய்மை பணியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாநகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துகளில் தூய்மைப் பெண் பணியாளர்கள் என்று ஏற முயன்ற நிலையில் பேருந்து நடத்துனர்கள் பேருந்தில் ஏற்ற மறுப்பு தெரிவிப்பதோடு, அலைக்கழிப்புக்கு ஆளாக்குவதாகவும் புகார்கள் எழுந்தது. இந்நிலையில் அலைக்கழிப்புக்கு ஆளான பெண்கள் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தின் சாலையில் அமர்ந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள்  பேச்சுவார்த்தை நடத்தி மாற்றுப் பேருந்து மற்றும் ஆம்புலன்சில் பெண் பணியாளர்களை பணிக்கு அனுப்பி வைத்தனர்.

'Refusal to board government bus'-women sanitation workers dharna

இதில் பாதிக்கப்பட்ட பெண் தூய்மையாளர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''நாங்கள் 7:00 மணிக்கு டூட்டிக்கு போகணும். ஆபீசில் சொன்னாலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்கிறார்கள். 7:15 மணிக்குத்தான் பஸ் எடுக்க வேண்டும் என கலெக்டர் சொல்லி இருக்காருன்னு சொல்கிறார்கள். அதான் கலெக்டர் வரட்டும் என நாங்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினோம். எங்களுடைய மேனேஜர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதால் நாங்கள் இப்பொழுது போகிறோம். பஸ்ஸை நிப்பாட்ட சொன்னாலும் எந்த பஸ் ஸ்டாப்பிலும் நிப்பாட்டுவது கிடையாது. நாயை விடக் கேவலமாக நினைக்கிறார்கள்'' என ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.