Skip to main content

உஷ்ணத்தை போக்க ஏழைக்கு ஏற்றபழம் தர்பூசணி

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

நகரம் முதல் கிராமபுறங்கள் வரை தர்பூசணி பழத்தின் விற்பனை படு ஜோராகியிருக்கிறது, கோடை வெயிலின் உடல் சூட்டைத் தணிப்பதற்கு தர்பூசணி பழத்தை பருகுவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டியே வருகின்றனர். 

 

watermelon

 

கோடைகாலம் தொடங்கிய நாள்முதல் நாகை, திருவாரூர், தஞ்சை, காரைக்கால் பகுதிகளில் வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. விவசாயிகள் முதல் ஏசியில் இருக்கும் அதிகாரிகள் வரை உஷ்ணத்தால் அல்லல்பட்டு வருகின்றனர். அதோடு வயிற்றுப்போக்கு, மஞ்சல் காமாலை உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கும் ஆளாகிவருகின்றனர். ஆக உடல் சூட்டை தணிக்க  இளநீர், பழச்சாறுகள் என தேடினாலும், குறைந்த விலையில் இயற்கையுடன் கூடிய மருத்துவ குணம் கொண்ட தர்பூசணி பழங்களையே மக்கள் அதிகம் விரும்பி செல்கின்றனர். 
 

திருவண்ணாமலை மாவட்டம் ஒட்டம்பட்டு, அருணாவரம், தண்றை, வீரபாண்டி, வைப்பூர், திருக்கோவிலுார், நாகை மாவட்டம் திருநகரி, கொள்ளிடம் உட்பட பல பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் தர்பூசணி பழங்கள், தற்போது பல பகுதிகளிலும் அதிக அளவில் குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். கோடை வெயிலின் தாகத்தை தணிக்க தர்பூசணி ஜுஸ் விற்பனை டெல்டா பகுதிகளில் அமோகமாக நடைபெறுகிறது. குழந்தைகள் மற்றும் வயதான முதியவர்கள் தர்பூசணி ஜுஸ் பருகி வெயிலில் தாகத்தை தணித்து வருகின்றனர்.
 

இதுகுறித்து தர்பூசணியை ருசித்துக்கொண்டிருந்த இளையராஜா கூறுகையில், "கோடை வெயில் அதிகமாக இருக்கிறது, கத்திரி வெயில் துவங்குவதற்குள் வெயிலின் உஷ்ணம் அதிகரித்துவிட்டது. உடலில் ஏற்பட்டிருக்கும் உஷ்ணத்தைப்போக்க இளநீர் குடிக்கலாம் என்றால் 35 ரூபாய் ஆகிறது. மாதுளை, சாத்துக்குடி கரும்பு ஜூஸ், குடிக்கலாம் என்றால் முப்பது ரூபாய்க்கு மேல் ஆகிறது. ஏழைக்கேத்த எள்ளுருண்டை போல் ஐந்து ரூபாய்க்கு ஒரு பீஸ் தர்பூசணி பழம் கிடைக்கிறது. அதனால் அதை நாடி செல்கிறோம் இது இல்லை என்றால் எங்களின் கதி அவ்வளவுதான்" என்று கூறுகிறார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோடை காலத்தில் அரைநாள் விடுப்பு; அதிரடி அறிவிப்பு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Action Notification on Half day leave during summer in telangana

நடப்பாண்டில், இந்தியாவில் கோடை காலம் வழக்கத்தை விட அனலாக தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, தெலங்கானா, ஆந்திரா, வடக்கு உள் கர்நாடகம், மராட்டியம், ஒடிசாவில் வழக்கத்தைவிட அனல் காற்று அதிக நாட்கள் வீசும் என்று கூறியிருந்தது. அதே நேரத்தில் மார்ச் மாதத்தில் சராசரி அளவான 29.9 மி.மீ.யைவிட அதிக மழை (117%) பெய்யும் என்றும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வழக்கத்தை விட அதிகபட்ச வெப்பமும், குறைந்தபட்ச வெப்பமும் அதிகமாக இருக்கும் என்றும் கூறியிருந்தது. 

கோடை காலத்தை ஒட்டி, பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் நலன் காக்கும் வகையில் தெலங்கானா அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. தெலங்கானா மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பிப்ரவரி கடைசி வாரத்தில் இருந்து மாநிலத்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் நலன் கருதி மாநில அரசு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

அந்த வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இம்மாதம் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை அரைநாள் மட்டுமே செயல்படும். அதன்படி, காலை 8:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும். காலை வகுப்புகள் முடிந்ததும், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். பத்தாம் வகுப்புக்கான தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில்,10ஆம் வகுப்புக்கு மட்டும் மதிய வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும். காலையில் தேர்வுகள் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கிய பிறகு, மதிய வகுப்புகள் தொடங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.

Next Story

"ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்" - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

tamilnadu school reopen june 7th minister anbil mahesh poyyamozhi 

 

திருச்சியில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக குடோனில் இன்று (26.05.2023) பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பாடநூல் கழகத் தலைவர் லியோனி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

 

ஆய்வுக்குப் பின்னர் பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி கோடை வெயிலை கருத்தில் கொண்டு ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகள் கோடை வெயிலின் தாக்கத்தால் காலதாமதமாக திறக்கப்படுவதால்,  பள்ளி வேலை நாட்களில் எண்ணிக்கையை  சரி செய்ய மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு அந்த விடுமுறை நாட்கள் சரி செய்யப்படும்

 

தனியார் பள்ளிகளில் தமிழ் கட்டாயம் என்கிற அறிவிப்பு அறிவிப்போடு இல்லாமல் அதை அந்த அந்த பள்ளிகள் சரியாக பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்வது எங்கள் கடமை, அதனால்தான் கல்வி அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இதை வலியுறுத்தி கூறி உள்ளேன்" என்று தெரிவித்தார்.