Vriddhachalam  Corona... Corona for DMK MLA!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டாட்சியராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் இ.கவியரசு. இவர் கரோனா தொடங்கிய காலத்திலிருந்து கரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக பணியாற்றி வந்தார்.அதன் காரணமாக கோவையில் இருந்த தனது குடும்பத்தை கூட பார்க்க செல்லாமல் விருத்தாசலத்திலேயே கடந்த 4 மாதங்களாக தங்கியிருந்தார்.

Advertisment

viruthachalam corona

இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி கரோனா அறிகுறி தென்பட்டதால் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். சிகிச்சை பெற்று வந்த வட்டாட்சியர் கவியரசு சிகிச்சை பலனின்றி இன்று இரவு (18.07.2020) உயிரந்தார்.

Advertisment

களப்பணியில் வருவாய்துறையினர் ஈடுபட்டு வருவதால், வட்டாட்சியர் ஒருவர் உயிரிழந்திருப்பது கடலூர் மாவட்டத்தில் உள்ளவருவாய் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்றதொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும், கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமானவெ.கணேசனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் இன்று (18.07.2020) சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

CUDDALORE  dmk mla

இதையடுத்து விருத்தாசலம் பகுதியில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும், அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்படுவதாலும் விருத்தாசலத்தில் முழு ஊரடங்கை அமுல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.