
தமிழகத்தில் 9ஆம் வகுப்பிற்கான தொழிற்கல்வி பாடத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் நிதியுதவியில் டெய்லரிங், பியூட்டிசியன், பேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட பல்வேறு தொழிற்கல்வி படிப்புகள் கற்பிக்கப்பட்டுவந்தன. அவை இந்தாண்டு முதல் ரத்து செய்யப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முந்தைய கல்வியாண்டில் 9ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பயின்றவர்களுக்கு மட்டும் இந்தாண்டு 10ஆம் வகுப்பில் தொழிற்கல்வி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.