டெல்லியில் நடைபெற்ற அமைப்பு ரீதியானநிகழ்ச்சியில்கலந்துகொண்டவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 16 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அந்த நிகழ்ச்சியில்1500 பேர் கலந்துகொண்டதாகவும், 981 பேர் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூடுதல் தகவல் வெளியாகி உள்ளது.

Virudhunagar district participating in Delhi event! First test for 13 people

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

விருதுநகர் மாவட்டத்திலிருந்து சென்று அந்த நிகழ்ச்சியில்கலந்துகொண்டு திரும்பியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சுழி, அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் 13 பேர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் முதல்கட்ட பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை நடந்துள்ளது.

Advertisment

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர் அந்த டெல்லிநிகழ்ச்சியில்கலந்துகொண்டதாகவும், வத்திராயிருப்பைச் சேர்ந்த ஒருவர் தற்போது சென்னையில் இருப்பதாகவும், விருதுநகரில் மூவர், ராஜபாளையத்தில் நால்வர், ஸ்ரீவில்லிபுத்தூரில் நால்வர், அருப்புக்கோட்டையில் ஒருவர், திருச்சுழியில் ஒருவர் என மொத்தம் 13 பேருக்கு தற்போது கரோனா பரிசோதனை நடந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.