Skip to main content

‘இதுவும் கொடுப்போம்; இன்னமும் கொடுப்போம்!’- விருதுநகர் மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் போட்டா போட்டி!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020


ஊரடங்கு நேரத்தில் உதவி செய்வதில்,ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே, விருதுநகர் மாவட்டத்தில் ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவி வருகிறது. 

இது சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன் செய்த நற்காரியங்கள்-சாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியம் மற்றும் மேற்கு ஒன்றியத்தில், தோட்டக்கலைத்துறை சார்பாக ரூ.200 மதிப்புள்ள 8 வகையான காய்கறிகளை, குறைந்த விலையில் ரூ.70- க்கு பொதுமக்களுக்கு வழங்கியிருக்கிறார்.
 

virudhunagar district admk and dmk parties mlas provide help peoples


சாத்தூர் நகராட்சியிலுள்ள 24 வார்டுகளிலும் நோய் எதிர்ப்பு சக்தி அளித்திடும் கபசுர குடிநீரை பொது மக்கள் பருகச் செய்திருக்கிறார்.மேலும், ஆதரவற்ற திருநங்கைகளுக்கு அரிசி, பருப்பு. காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை கொடுத்துள்ளார். 
 

virudhunagar district admk and dmk parties mlas provide help peoples


சாத்தூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து,சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 18 ஊராட்சி தலைவர்களுக்கும் ஐயாயிரம் முகக்கவசங்களை வழங்கியுள்ளார்.மேலும், சாத்தூர் நகரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் மளிகைச் சாமான்கள் கிடைக்கச் செய்துள்ளார். 
 

virudhunagar district admk and dmk parties mlas provide help peoples


 

http://onelink.to/nknapp



சிவகாசியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, சாத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ., எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், ராஜபாளையத்தில் திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் என மூவரும் வரிந்துகட்டி மக்களைச் சந்தித்து வருகின்றனர்.விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. 
 

மக்கள் பிரதிநிதிகளின் நற்சேவைகள் தொடரட்டும்!

சார்ந்த செய்திகள்

Next Story

நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் மரணம்; கொரோனாவால் முடங்கிய சீனா

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

9 thousand people passed away per day; China paralyzed by Corona

 

சீனாவில் கொரோனா பரவலைத் தடுக்க அந்நாடு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பி.எஃப்.7 வகை தொற்று அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.

 

பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர்.

 

அதே சமயம் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. சீனாவில் நாள்தோறும் 9 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் சடலங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா தொற்று அச்சத்தினால் இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்கு உறவினர்கள் தயக்கம் காட்டுகின்றனர். 

 

இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

 

 

Next Story

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றங்களுக்கு உத்தரவு

Published on 11/10/2022 | Edited on 11/10/2022

 

High Courts ordered to file criminal cases against MPs and MLAs!

 

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருக்கும் குற்ற வழக்குகளின் விவரங்களை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

கிரிமினல் குற்ற வழக்கில் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுகிறபோது, தண்டனை முடிந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டால், அவர்கள் எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சராகக் கூட பதவி வகிக்க முடியும் என்ற சட்ட அம்சத்தை மாற்றி இவர்கள் தேர்தலில் நிற்க வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா வழக்கு தொடர்ந்திருந்தார். 

 

இதனை விசாரித்த நீதிபதிகள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீது ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருக்கும் குற்ற வழக்குகளின் விவரங்களை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

 

தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்தும், அது சார்ந்த அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்னதாக மூன்று முறை விளம்பரப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு நெறிமுறைகளை கடந்த முறை விசாரணையின் போது உச்சநீதிமன்றம் வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.