Skip to main content

விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்த கோரிக்கை!

Published on 26/01/2022 | Edited on 26/01/2022

 

Request for Viruthakriswarar temple to hold Kudamulukku in Tamil!

 

தொன்மை வாய்ந்த, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடைபெறும் குடமுழுக்கு விழாவைத் தமிழ் அர்ச்சனையுடன் நடத்த வேண்டுமென தெய்வத் தமிழ் பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில். 'காசியை விட வீசம் பெரிசு விருத்தகாசி' என போற்றப்படும் இத்திருக்கோவில் பஞ்சாட்சர முறைப்படி ஜந்து கோபுரம், ஜந்து பரிகாரம், ஜந்து கொடிமரம், ஐந்து தீர்த்தம், ஐந்து தேர், ஜந்து நந்தி, ஐந்து மண்டபம் என ஐந்தின் சிறப்பாக சிறப்பம்சத்துடன் அமைந்துள்ளது.  இத்திருத்தலத்தில் 12 ஆண்டுகளுக்குப் பின்பு, வருகின்ற பிப்ரவரி 06-ஆம் தேதி திருக்குடமுழுக்கு நடைபெற உள்ளது.

 

Request for Viruthakriswarar temple to hold Kudamulukku in Tamil!

 

இந்நிலையில் தெய்வத் தமிழ் பேரவை சார்பில் தமிழ் தேசிய பேரியக்க பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் தலைமையில்  திருக்குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என்று திருக்கோவிலின் செயல் அலுவலர் முத்துராஜாவிடம் மனு  அளிக்கப்பட்டது.

 

அம்மனுவில்  'சமஸ்கிருதத்திற்கு இணையாக,  தமிழிலும் அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்ற  நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்,  குடமுழுக்கு விழா நடத்தப்பட வேண்டும். வேள்வி சாலை பூஜை, கலச பூஜை, கருவறை பூஜை உள்ளிட்டவைகளில்,  சம அளவில் தமிழில் அர்ச்சனை இடம்பெற வேண்டும். தமிழில் அர்ச்சனை செய்யக் கூடிய நபர்களின் பெயர்களைத் தெரிவிக்க வேண்டும்' என்று மனுவில் கோரிக்கையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

Request for Viruthakriswarar temple to hold Kudamulukku in Tamil!

 

தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் முத்துராஜா கூறினார்.

 

இதில் தெய்வத்தமிழ்ப் பேரவை கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணிய சிவா, தமிழ் தேசிய பேரியக்கம் மாநில செயற்குழு உறுப்பினர் முருகன்குடி முருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

13வது நோன்பு நாளில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Ready-to-eat Biryani to bake on the 13th day of Lent

ஏப்ரல் மாதம் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகின்றனர். சூரியன் உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பர். மாலை 6 மணிக்கு மசூதிக்கு சென்று நமாஸ் செய்துவிட்டு உணவு உண்பார்கள். காலை 5 மணிக்கு முன்பாக உணவு உண்பதை நிறுத்திவிடுவர். நோன்பு காலத்தில் இயலாத மக்களுக்கு மதம் பார்க்காமல் உதவுவார்கள்.

வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச் சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர்.

சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து பிரியாணி தயார் செய்யும் பணி தொடங்கிய நிலையில் நள்ளிரவு ஒரு மணி வரை பிரியாணி சமைக்கப்பட்டது. இந்தப் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்ட நிலையில், மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.