
தமிழக அரசானது தற்போது முழு ஊரடங்கைசெயல்படுத்தியுள்ள நிலையில், கடந்த மாதங்களில் செலுத்த வேண்டிய மின்கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 15ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மின்கட்டணம் செலுத்த மே 31வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இதனால் மின் கட்டணம் செலுத்துவதற்காக அந்தந்த மாவட்டங்களில் உள்ள மின் பகிர்மான கழகங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான மையங்களில் பொதுமக்கள் அரசு விதிமுறைகளை மீறி முகக்கவசம், தனிமனித இடைவெளி ஆகியவை இல்லாமல், போட்டி போட்டுக்கொண்டு விதிமுறைகளைப்பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக மின் கட்டணம் செலுத்துவதற்கு காத்திருக்கின்றனர். இதனை சரி செய்வதற்கு, பகிர்மான அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நோய்த் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)