/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/geena-selvam-art.jpg)
விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து பணம் தராமல் ஏமாற்றிய வியாபாரி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அப்பாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் அளித்த புகாரில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குமார் நெல் வியாபாரத் தொழில் செய்து வருவதாகவும் இதன் மூலம் தனக்கு அறிமுகமானவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் சேவூர் கிராமத்தைச் சேர்ந்த அப்பாவு நையனார் என்பவரின் மகன் ஜீனசெல்வம் (வயது 62). இவருக்கு கடந்த 2017 முதல் 2018 ஆண்டு வரைசெஞ்சி அப்பாப்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து சுமார் 733 நெல் மூட்டைகளை இரண்டு லாரிகளில் ஏற்றி ஜீன செல்வத்திற்கு அனுப்பியதாகவும் அதற்கானதொகை சுமார் 10 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை ஜீன செல்வம் விவசாயிகளுக்கு தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதுகுறித்து குமார்07.04.2023 அன்று அளித்த புகார் மனுவின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின்படி துணை காவல் கண்காணிப்பாளர் சுவாதி மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் மனோகரன் மற்றும் காவலர்கள் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்த ஜீன செல்வம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)