Skip to main content

செல்போன் எண்ணை வெளியிட்டு அதிரடி காட்டிய புதிய எஸ்.பி !

தமிழக தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கையில்லை, புதிய தேர்தல் பார்வையாளரை நியமிக்க வேண்டும் என்று தமிழக எதிர்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்ட நிலையில் இந்திய தலைமை தேர்தல் கமிஷன் பரிந்துரையின் பேரில் கரூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி யாக பணியாற்றி வந்த ராஜசேகரன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  

 

vikraman takes charge as karur superindent of police

 

கரூர் எம்.பி. தேர்தலில் பிரச்சாரத்தின் கடைசி நாளில் கரூர் கலெக்டர், என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை தேர்தலை நிறுத்த தலைமைக்கு கடிதம் எழுதியிருக்கிறேன் என்று செல்லியிருந்த நிலையில் அன்று கரூர் அதிமுக திமுக கட்சியினர் இடையே பெரிய மோதல் நடைபெற்றது. இது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என எஸ்.பி மீது குற்றாசாட்டு இருந்தது. 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஆகியார் மீது காங்கிரஸ் கட்சியின் சார்பில் புகார் தெரிவித்திருந்த நிலையில் தற்போது திடீர் என கரூர் எஸ்.பி மாற்றப்பட்டிருக்கிறார். 

இந்த நிலையில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் கணினி பிரிவு எஸ்.பி யாக பணியாற்றிய விக்ரமன், கரூர் மாவட்ட எஸ்.பி யாக நியமனம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கரூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் விக்ரமன், இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு, கரூர் மாவட்ட போலீஸ்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

கரூர் எஸ்.பியாக பொறுப்பெற்ற விக்ரமன் பத்திரிகையாளர்களிடம் :-

வருகிற 19-ந்தேதி அன்று அரவக்குறிச்சி இடைத்தேர்தலையொட்டி 159 இடங்களில் 250 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதையொட்டி தேர்தல் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக பணம் எடுத்து செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க பறக்கும் படை, ஆய்வு குழு ஆகியவை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்யும் நோக்கில் பணம் எடுத்து செல்லப்படுகிறதா? சட்ட விரோத நடவடிக்கையில் யாரும் ஈடுபடுகின்றனரா? என்பதை கண்காணிக்க அரவக்குறிச்சி தொகுதியினுள் 29 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கைகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் தொடர்பாக மக்கள் புகார் அளிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ள 1950 என்கிற இலவச எண் உள்ளது.
 

vikraman takes charge as karur superindent of police

 

பொதுமக்கள் தேர்தல் தொடர்பாக அல்லது வேறு ஏதாவது புகார் தொடர்பாக, போலீஸ் சூப்பிரண்டிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என விரும்பினால், 93446-13343 என்கிற எண்ணை தொடர்பு கொண்டால் தகவல் பெறப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு, பாதுகாப்பினை பலப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. நான் விழுப்புரம், நெல்லை, திருவாரூர் மாவட்ட எஸ்.பி யாக பணியாற்றி இருக்கிறேன்.

2016-ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்ட அனுபவம் உள்ளது. இதேபோல் கியூ-பிரிவு எஸ்.பி யாக பணியாற்றியுள்ளேன். எனது சொந்த ஊர் சென்னை ஆகும். தற்போது கரூர் மாவட்ட எஸ்.பியாக பொறுப்பேற்றுள்ளேன்" என கூறினார்.

இந்நிலையில் விதிமுறைகளுக்கு மாறாக, நீண்ட நாட்களாக கரூரில் பணிபுரிந்த கரூர் எஸ்.பி கும்மராஜா அவர்களை பணியிட மாற்றம் செய்ய பலதரப்பு அமைப்புகளும் கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரிடம், காவல் கண்காணிப்பாளரிடம் மற்றும் உயரதிகாரிகளிடமும் வேண்டுகோள் வைத்தும், அவை ஏற்கப்படாமல் இருந்தது. 

இதனையடுத்து கும்மராஜா தொடர்ந்து கரூரில் பணியில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளதற்கான காரணங்களை தெரிவிக்கும்படி கேட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் காவல்துறைக்கு மனு அனுப்பி இருந்தார். காவல்துறை சார்பில், "3 ஆண்டுகள் முடிய இன்னும் சில மாதங்கள் இருப்பதால் அவர் பணியில் தொடர்கிறார்" என்று பதிலளித்துள்ளனர். ஆனால் கும்பராஜா எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர், என்று அவருடைய அத்தனை பதவி உயர்வுகளை இதே கரூர் மாவட்டத்திற்கு உள்ளாகவே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல திமுக சார்பில் டி.எஸ்.பி. கும்பராஜாவை மாற்றம் செய்யக்கோரி புகார் மனு கொடுத்திருக்கிறார்கள். ஆளும் கட்சிக்கு ஆதரவாக டி.எஸ்.பி. கும்பராஜா செயல்படுவதால் அவர் மீதும் அடுத்த நடவடிக்கை பாயும் என தேர்தல் பார்வையாளர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்