Skip to main content

நீங்கள் தயாரா? - தொண்டர்களுக்கு விஜயகாந்த் அழைப்பு!

Published on 13/08/2021 | Edited on 13/08/2021

 

Vijaykanth gives advice to volunteers!

 

தமிழகத்தில் மீதம் உள்ள நகராட்சி இடங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தமிழக அரசு முனைப்புக்காட்டிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக கட்சிகள் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டங்களை அவ்வப்போது நடத்திவருகிறது. அதேபோல் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தயாராக உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அதேபோல் சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்துப் போட்டியிட இருக்கிறது.

 

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கு தேமுதிகவினர் ஆயத்தமாக இருக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிட தேமுதிகவினர் தயாராக இருக்க வேண்டும் என அவர் தேமுதிக தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.    

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“தமிழகத்திற்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்” - தேமுதிக கண்டனம்

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
dmdk condemns Budget is a disappointment for Tamil Nadu

மத்திய அரசு அறிவித்திருக்கும் பட்ஜெட், தமிழகத்திற்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் என தேசிய முற்போக்கு திராவிட கழகம் கடுமையாக சாடியுள்ளது. 

இது தொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு அறிவித்துள்ள 2024-2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழகத்திற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறது. பெயரளவில் கூட தமிழ்நாடு என்ற ஒரு சொல் கூட பட்ஜெட் வாசிப்பில் இல்லை. பீகாருக்கும், ஆந்திர பிரதேசத்திற்கு தரும் முக்கியத்துவம் எந்த ஒரு வகையிலும் ஒரு சதவீதம் கூட தமிழகத்திற்கு தரவில்லை என்பது கண்டனத்திற்குரியது. 

அதுமட்டுமல்லாமல் ஏற்கெனவே ஜிஎஸ்டி (GST) மற்றும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பல்வேறு விதமான துன்பங்களை மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் ஜிஎஸ்டி வரியை ஓரளவு குறைந்தாலும், விசைத்தறிகள், சிறு, குறு வியாபாரம் மற்றும் பல்வேறு விதமான தொழிற்சாலைகளை சேர்ந்தவர்களுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும். மேலும் சிறு கடைகள், வியாபாரம், சிறு தொழில்கள் போன்றவைகளுக்கு ஜிஎஸ்டி என்பது வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகும் நிலையுள்ளது.

எனவே ஜிஎஸ்டியை திரும்பப் பெறுவது குறித்து எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கு மத்திய பட்ஜெட்டில் புதிதாக விவசாயத்திற்கோ, ரயில்வே துறையிலையோ, சாலைகளுக்கோ என எந்தவொரு அறிவிப்பும் இல்லை என்பது வேதனை அளிக்கிறது. வேலை வாய்ப்பை உருவாக்க கூடிய அளவு எந்த ஒரு மிகப்பெரிய தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் தமிழகத்திற்கு வராததும் பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது. எனவே “ஒரு கண்ணில் வெண்ணையும்”, “ஒரு கண்ணில் சுண்ணாம்பும்” வைத்து தமிழகத்தை மட்டும் வஞ்சிக்கக்கூடிய பட்ஜெட்டாக தமிழக மக்களாகிய நாங்கள் பார்க்கிறோம். இது பெரும் கண்டனத்துக்குரிய மத்திய பட்ஜெட் ஆகும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

“ஏ.ஐ மூலம் விஜயகாந்தைத் திரைப்படங்களில் பயன்படுத்தக் கூடாது” - பிரேமலதா விஜயகாந்த்

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
 Premalatha Vijayakanth Vijayakanth should not be used in films by AI without permission

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான நடிகர் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்தார். அவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர். இதன் பிறகு, மறைந்த விஜயகாந்தை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பலரும் நடிக்க வைப்பதாகத் தகவல் வெளியானது. குறிப்பாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் மறைந்த விஜயகாந்தை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் நடிக்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, பலரும் இந்த விஷயத்தை கையில் எடுக்கயிருப்பதாக அவ்வப்போது கூறி வந்தனர். 

இந்த நிலையில், விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், அனுமதியின்றி எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, ‘தமிழ் திரை உலகைச் சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். விஜயகாந்தை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாகத் தொடர்ந்து செய்திகள் வருகிறது. எனவே, இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது.

எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே அறிவிப்பை வேளியிட வேண்டும். ஏ.ஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாகும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடகச் செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

The website encountered an unexpected error. Please try again later.