Skip to main content

’அதிமுக தோகை விரித்தாடும் ஆண்மயில்..’-அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

Published on 14/01/2019 | Edited on 14/01/2019
v


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வருகின்ற 20 ஆம் தேதி நடக்கும் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் கணேஷ், மாவட்ட எஸ்பி செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் அதிமுகவினர் இருந்தனர்.

 

    இந்த ஜல்லிக்கட்டில் தனது புதிய காளையை களமிறக்கவும் எண்ணியுள்ளார். இந்த நிலையில் வாடிவாசல்கள் சரியாக அமைக்கப்பட்டுள்ளதா? நீண்ட தூரம் காளை ஒற்றைப்பாதையில் வேகமாக ஓடி களமிறங்கும் போது விபத்துகள் நேராமல் கவனமாக வாடிவாசல் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினார்.

 

 கடந்த ஆண்டு அவரது செல்லக்காளை கொம்பன் வாடிவாசலில் நீண்ட நேரம் வேகமாக சென்ற போது  தடுப்பு கல்லில் இடித்து மரணமடைந்ததால் இந்த எச்சரிக்கை ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.     இந்த நிலையில் விராலிமலை ஜல்லிக்கட்டில் கடந்த ஆண்டைவிட அதிகமான காளைகளும் காளையர்களை களமிறக்கி சாதனையாக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். அதாவது சுமார் 2500 காளைகளை களமிறக்க திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.

 


வாடிவாசல் ஆய்வுக்கு பிறகு  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்,  தமிழக முதல்வர் மக்களுக்கான அரசை நடத்தி வருகிறார். அவரது வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வளர்ச்சியைப் பொறுக்க முடியாத ஸ்டாலின் போன்ற எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்கள் முதல்வர் மீது மறைமுகமாக சிலரை தூண்டிவிட்டு பொய் குற்றச்சாட்டுகளை கூறி ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.   முதல்வர் இவர்களது குற்றச்சாட்டுகளை முறியடிப்பார். இவர்களின் குற்றச்சாட்டு மக்கள்  மன்றத்தில் ஒரு போதும் எடுபடாது.  அதிமுக அழகிய தோகை விரித்தாடும் ஆண்மையில், வான்கோழியை போன்ற சிலர் தோகை விரித்து ஆட நினைத்தால் வேடிக்கையாக தான் இருக்கும்.  வான்கோழி ஒரு போதும்  ஆண் மயிலாக முடியாது என்று அவர் கூறினார்.
  

சார்ந்த செய்திகள்

 

Next Story

குட்கா வழக்கு; சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
 CBI court action order on Gutka case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இது தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில், இன்று (08-07-24) இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்த போது, இந்த வழக்கை எம்.பி., எல்.எல்.ஏக்களுக்கு எதிரான் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள், இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த வழக்கில் உள்ளதாக விசாரணையை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Next Story

திமுக தண்ணீர்ப் பந்தலுக்குச் சென்று குளிர்பானம் கொடுத்த விஜயபாஸ்கர்!

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
Vijayabaskar went to the DMK water place and offered refreshments

தமிழ்நாடு முழுவதும் கத்தரி வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் நிலையில் பகலில் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் திமுக, அதிமுக என அனைத்துக் கட்சிகளும் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல்களை திறந்து தண்ணீர், சர்பத், மோர், போன்றவற்றுடன் பழங்கள், இளநீர் உள்ளிட்டவைகளையும் வழங்கி வருகின்றனர்.

இதே போல புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் திமுக சார்பில் அமைச்சர் மெய்யநாதன் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார். அந்தப் பந்தலில் தொடர்ந்து தண்ணீர், மோர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதே பகுதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்க மாஜி அமைச்சர் விராலிமலை விஜயபாஸ்கர் எம்எல்ஏ வருகை தந்திருந்தார். அப்போது தண்ணீர்ப் பந்தலை திறந்து வைத்து அந்தப் பகுதியில் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களுக்கு குளிர் பானங்களை வழங்கி உள்ளார்.

அப்போது, அருகில் இருந்த திமுக தண்ணீர் பந்தலுக்குச் சென்ற விஜயபாஸ்கர் அங்கு தண்ணீர் கொடுக்க நின்ற திமுகவினருக்கும் குளிர்பானங்களை கொடுத்து படம் எடுத்துக் கொண்டார். இப்போது அந்தப் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.