Skip to main content

புதிது புதிதாக ட்ரெண்டிங்! 10 இயர்ஸ் சேலஞ்சுக்கு அடுத்து…! -இஷ்டத்துக்கு இணையத்தில் கலாட்டா!

Published on 29/01/2019 | Edited on 29/01/2019

 

‘ரொம்ப போர் அடிக்குது; பொழுதே போகல’ என்று சொன்னதெல்லாம் அந்தக்காலம். புதிது புதிதாக ஏதோ ஒன்றைச் சிந்தித்து ‘மீம்ஸ்’ போட்டு,  ட்ரெண்டிங் என்ற பெயரில் பிரபலமாக்கி, பலரையும் பொழுதுபோக்க வைப்பது இந்தக்காலம்.  ‘10 இயர்ஸ் சேலஞ்ச்’ என பலரும் ஆர்வமாக, அவரவர் இஷ்டத்துக்குப் பொழுதைக் கழித்த நிலையில், தற்போது   வாட்ஸப் ஸ்டேட்டஸ் ட்ரெண்டிங் என, வலைத்தளங்களில் மீம்ஸ்களைக் கொட்டோ கொட்டென்று கொட்டுகின்றனர். 

 

லேட்டஸ்ட் வரவான இந்த  மீம்ஸ் கான்செப்ட் என்னவென்றால், சினிமாவோ, அரசியலோ, பொது விஷயமோ, ஏதோ ஒன்றை எடுத்துக்கொண்டு, சம்பந்தப்பட்ட ஒருவரோ, சிலரோ, அவர்களின் படத்தைப் போட்டு, அதே காட்சியில் இடம்பெற்ற, மற்றவர்கள் யார் என்பதை  ‘வியூட் பை’ ஆகக் காட்டுவதுதான். இங்கே சில மீம்ஸ்களைப் பார்ப்போம்!

 

m

 

ஃப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் விஜய்யும் சூர்யாவும் ரமேஷ்கண்ணாவைப் பார்ப்பதற்காக சென்னை வந்து ஒரு மரத்தடியில் நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். குபீர் சிரிப்பை வரவழைக்கும் இந்தக் காட்சியில், இருவரும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிடுவார் ‘கோபால்’ என்ற கேரக்டரில் நடிக்கும் சார்லி. இந்த மீம்ஸில் விஜய் சூர்யா இடம்பெற்றிருக்கும் காட்சி படமாகவும், சார்லியை  ‘வியூட் பை’ ஆகவும் காட்டியிருக்கின்றனர். 

 

m

 

லண்டன் திரைப்படத்தில் மனைவி நளினி வீட்டில் இல்லாத நேரத்தில், வக்கீல் வெடிமுத்துவாக நடித்திருக்கும் வடிவேலு, மும்தாஜுக்காக ஜூஸ் போடுவார். அந்த நேரத்தில் நளினி வந்துவிட, அறைக்குள் சென்று  ஒளிந்துகொள்வார் மும்தாஜ்.  அப்போது, கையில் ஜூஸுடன் உள்ள வடிவேலுவிடம் “ஜூஸ் யாருக்கு?” என்று கேட்பார் நளினி. “உனக்கு..” என்று திருதிருவென்று முழித்து அசடு வழிவார் வடிவேலு. இதையும் ஜூஸ் ஜாருடன் இருக்கும் வடிவேலு முகத்தை வைத்து மீம்ஸ் போட்டிருக்கின்றனர்.  ‘வியூட் பை’ ஆக பேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நளினியைக் காட்டியிருக்கின்றனர். 

 

m

 

ரஜினியையும் விடவில்லை. சந்திரமுகியில், வடிவேலு வீட்டு வேலைக்காரியைப் பின்தொடர்ந்து,  இடுப்பைத் தொடப் போவதைப் பார்த்துவிடுவார் ரஜினி. இதை வடிவேலு – வேலைக்காரியின் படத்தைப் போட்டு மீம்ஸ் ஆக்கியிருக்கின்றனர். வியூட் பை-இல் வருகிறார் ரஜினி. 

 

k

 

குஷி படத்தில் ஜோதிகாவின் இடுப்பைப் பாத்துவிடுவார் விஜய். அப்போது பெரிய களேபரமாகிவிடும். இந்தக் காட்சியில், ஜோதிகாவின் இடுப்பை மட்டும் மீம்ஸாகப் போட்டு, வியூட் பை என விஜய்யைப் போட்டிருக்கின்றனர். 

 

அரசியலை விட்டு வைப்பார்களா என்ன? தாமரை மலர்ந்தே தீரும் என்று குளத்தில் தாமரை மலர்ந்திருப்பதைப் போன்ற ஒரு படத்தைப் போட்டு, வியூட் பை-யில் ஜீரோ என்று போட்டிருக்கின்றனர். அட, தாமரை மலர்வதை தமிழிசை கூடவா பார்க்காமல் இருப்பார். மீம்ஸ் க்ரியேட்டர்களுக்கு ஓவர் குறும்புதான். 

 

m

 

சிங்கம் திரைப்படத்தில் அனுஷ்காவின் துப்பட்டா ரவுடி ஒருவனின் கைக்குப் போய்விட,  சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா அந்தத் தியேட்டருக்கே வந்து, “எவன்லே அது?” என்று ஆவேசம் காட்டுவார். இந்த சீனை வைத்து, ‘எவன்ல? இத ட்ரெண்ட் ஆக்கினது?’ என்று  சூர்யா வாயால் கேட்பதுபோல் காட்டி, ‘மீம்ஸ் க்ரியேட்டர்’ என்று அந்த ரவுடியின் படத்தை வியூட் பை-யில் போட்டிருக்கின்றனர். 

பொல்லாத போக்கிரிதாங்க இந்த மீம்ஸ் க்ரியேட்டர்ஸ்!


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக வெற்றிக் கழகம் நாளை முக்கிய ஆலோசனை!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
Tamilaga Vettri Kazhagam important meeting tomorrow

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தன்னுடைய மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வந்தார். இந்த நிலையில்தான் அரசியலில் கால் பதிக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் தன்னுடைய இலக்கு என்றும் தெரிவித்திருந்தார். விஜய்யின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறி தற்போது வரை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை (19.02.2024) காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது. எனவே கட்சியின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

‘கங்குவா’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
Release of the second look poster of the movie 'Kangua'

சிறுத்தை சிவா இயக்கும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 10 மொழிகளுக்கு மேலாக 3டி முறையில் சரித்திரப் படமாக வெளியாக உள்ள இப்படத்தை, ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.  

இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, கொடைக்கானல், உள்ளிட்ட பகுதிகளைத் தொடர்ந்து தாய்லாந்தில் நடந்ததாகத் தகவல் வெளியானது. இதையடுத்து சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அதில் கடந்த நவம்பர் 22 ஆம் தேதி ரோப் கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் மோதியதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, விபத்து குறித்து விளக்கமளித்த சூர்யா, உடல் நலம் தேறி வருவதாகவும், உங்கள் அன்புக்கு நன்றி எனவும் குறிப்பிட்டிருந்தார். 

இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதாராபாத்தில் நடைபெற்று சமீபத்தில் முடிந்தது. இது குறித்து நடிகர் சூர்யா தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் குறிப்பிடும்போது, ‘இந்த படத்தை நீங்கள் திரையில் பார்க்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், பொங்கல் தினத்தை முன்னிட்டு கங்குவா படத்தின் புதிய போஸ்டரை வெளியிடுவதாக நேற்று (15-01-24) படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில், மாட்டுப் பொங்கல் தினமான இன்று (16-01-24) கங்குவா படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யா இடம்பெற்ற இந்த போஸ்டரால் ரசிகர்கள் மத்தியில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.