Vijay Sethupathi thanks Super Deluxe Director

Advertisment

விஜய் சேதுபதி, பகத் பாசில், மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'சூப்பர் டீலக்ஸ்'. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரை விமர்சகர்களாலும் பாராட்டப்பெற்றது. 8 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

விஜய் சேதுபதிக்கு முதல் தேசிய விருது வாங்கி கொடுத்த கதாபாத்திரமாக 'ஷில்பா' கதாபாத்திரம் அமைந்திருந்தது. அதில் திருநங்கையாக தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

Vijay Sethupathi thanks Super Deluxe Director

Advertisment

இந்நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் (29/03/2022) மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. அதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதை நினைவுகூரும் விதமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ள விஜய் சேதுபதி, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.