Skip to main content

விஜய் மக்கள் இயக்கம் முதல் வெற்றி! 

Published on 22/02/2022 | Edited on 22/02/2022

 

Vijay people's movement first victory!

 

புதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டில் தி.மு.க, அதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுடன் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அதன் மாவட்ட பொறுப்பாளர் முகமது பர்வேஸ் போட்டியிட்டார்.

 

வாக்கு எண்ணிக்கை முடிவில் விஜய் மக்கள் இயக்கம் முகமது பர்வேஸ் 547 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரையடுத்து திமுக வேட்பாளர் ரமேஷ் 205 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கோமதிசங்கர் 203 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

 

வெற்றிச் சான்றிதழ் பெற்று வெளியே வந்த முகமது பர்வேஸ் நடிகர் விஜய் படத்துடன் வெற்றி சான்றிதழை காட்டினார். கடந்த ஒரு வருட உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாடகை ஆம்புலன்ஸில் ஸ்டிக்கர் ஒட்டி அலப்பறை'- புஸ்ஸி ஆனந்த்தையே ஏமாற்றிய நிர்வாகி 

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Ambulance for rent sticker'-admin vijay makkal iyakkam

அண்மையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள சேதத்திற்கு அரசு மட்டுமல்லாது பல்வேறு தரப்பிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டது. நடிகர் விஜய்யும் 'விஜய் மக்கள் இயக்கம்' சார்பாக நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மத்திய மாவட்ட தலைவர் சபின் என்பவர் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்கள் பயன்படுத்தும் வகையில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் வழங்கப்பட்டது. 'தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என முழுவதும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அந்த ஆம்புலன்ஸ் சேவையை அண்மையில் நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் த.வெ.க கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடங்கி வைத்திருந்தார்.

விஜய் மக்கள் இயக்கம், மக்கள் பயன்பாட்டிற்காக இலவச ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வாயிலாக செய்திகள் பரவின. விஜய் பாடலின் பின்னணியில் சர்..சர்... என சாலையில் ஆம்புலன்ஸ் பறக்கும் அலப்பறை காட்சிகள் வெளியாகி இருந்தது. ஆனால் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்ட இரண்டு நாளிலேயே அந்த ஆம்புலன்ஸ் மாயமானது. இந்நிலையில் மாயமான ஆம்புலன்ஸ் என்ன ஆனது என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. இறுதியில் அது கன்னியாகுமரியில் காருண்யா ஆம்புலன்ஸ் சேவை என்ற பெயரில் இயங்கி வந்தது தெரிய வந்ததுள்ளது. அதன் பின்னரே இந்த சம்பவத்தின் முழு தகவல் வெளியானது.

விஜய் மக்கள் நிர்வாகியான சபின் நடிகர் விஜய்யின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக காருண்யா ஆம்புலன்ஸ் உரிமையாளர் சுனில் என்பவரிடம் தனக்கு இரண்டு நாட்கள் வாடகைக்கு ஆம்புலன்ஸ் வேண்டும் என கேட்டு எடுத்து வந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு 'தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரத்திற்காக நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு சேவைக்காக இலவசமாக இந்த ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டுள்ளது என பிரபலப்படுத்தியுள்ளார். அதோடு மட்டுமல்லாது வாடகைக்கு எடுத்து வந்து ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆம்புலன்சை புஸ்ஸி ஆனந்தை வைத்து தொடங்கி வைத்தார். ஆனால் அந்த ஆம்புலன்ஸின் உரிமையாளரான சுனில் தன்னிடம் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஆம்புலன்ஸில் 'விஜய் மக்கள் இயக்கம்' என ஸ்டிக்கரை ஒட்டி இயக்குவதை அறிந்து ஆம்புலன்ஸை மீண்டும் எடுத்துச் சென்றுள்ளார். இது குறித்து மற்ற நிர்வாகிகள் தலைமைக்கு புகார் அளித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

Next Story

‘தமிழக வெற்றி கழகம்’ - கட்சியின் பெயரை அறிவித்த விஜய்!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
 Vijay Political party Name Announced

விஜய்யின் மக்கள் இயக்கம் சமீப காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து இயக்கத்தில் உள்ள பல்வேறு அணிகளை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வந்தது. அந்த வகையில் வழக்கறிஞர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, மகளிர் அணி உள்ளிட்ட அணிகளின் ஆலோசனைக் கூட்டம் அடுத்தடுத்து நடைபெற்றது. 

இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வந்தார். சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைற்ற இந்த கூட்டத்தில் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் என 150க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.  

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் விஜய் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருவது, விஜய்யின் அரசியல் வருகையில் முக்கியமாகப் பட்டது. இந்த நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற விஜய் முடிவு செய்தார். மேலும் நிர்வாகிகளிடம் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துங்கள்; எப்போதும் தேர்தலுக்குத் தயாராக இருங்கள்; நமது இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் காலம் வந்துவிட்டது என நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தி வந்தார்.

இந்நிலையில் விஜய்யின் கட்சி பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.