Skip to main content

 ’பேசுவது பஞ்ச் டயலாக்... செய்வது வரி ஏய்ப்பு...’ விஜய் குறித்து அர்ஜுன் சம்பத் கமெண்ட்

Published on 07/02/2020 | Edited on 07/02/2020
அ

 

பிகில் படத்தில் வாங்கிய சம்பள விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் வீடுகளில் இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.  இது குறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் விமர்சனம் செய்துள்ளார்.

 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த உடன்குடியில் குடியுரிமைச் சட்ட ஆதரவுக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத்திடம்  விஜய் வீட்டு ரெய்டு குறித்து கேட்டபோது, ’’சினிமா துறையினர் திரைப்படங்களில் மட்டும் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொண்டு பஞ்ச் டயலாக் பேசுகிறார்கள்.  உண்மையில் விஜய் வருமான வரி ஏய்ப்பு செய்கிறார்கள். பேசுவது பஞ்ச் டயலாக்.. செய்வது வரி ஏய்ப்பு.. ஆனால், ரஜினி வருமான வரி ஏய்ப்பு செய்பவரல்ல. ரஜினி நேர்மையாக வருமான வரி செலுத்துபவர் என வருமான வரித்துறையால் சான்று வழங்கப்பட்டுள்ளது ’’என்று கூறியுள்ளார்.

 

சி.ஏ.ஏ. விவகாரத்தில் ரஜினி  பேசியது குறித்த கேள்விக்கு,  ‘’ரஜினி உண்மையை பேசியிருக்கிறார்’’என்று தெரிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென வந்த டூப் மோடி; கஸ்தூரி கொடுத்த பகீர் பேட்டி; அப்செட் ஆன அர்ஜுன் சம்பத்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Sudden dope Modi; Bagheer interview given by Kasturi; An upset Arjun Sampath

இந்து மக்கள் கட்சி நடத்திய  பாஜக ஆதரவு கூட்டத்தில் 'திமுக கூட்டணி தான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும்' என  நடிகை கஸ்தூரி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்து மக்கள் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார கூட்டம் கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதியில் நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் நடிகை கஸ்தூரி கலந்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இறுதி வரை அவர் வரவில்லை.

Sudden dope Modi; Bagheer interview given by Kasturi; An upset Arjun Sampath

இதனிடையே பிரதமர் மோடி வருகிறார் என அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்பிறகுதான் தெரிந்தது மோடி போன்ற வேடமிட்டு நபர் ஒருவர் கையை அசைத்தபடி மேடைக்கு வந்தார். இறுதிவரை கஸ்தூரி வருவார் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றத்தில் நிற்க ஒரு வழியாக கூட்டம் முடிந்தது. ஆனால் இறுதியாக கூட்டம் முடிந்த பின் சுமார் பத்து மணியளவில் அங்கு வந்த நடிகை கஸ்தூரி அர்ஜுன் சம்பத் உடன் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது திமுக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறும் என பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

அவர் பேசியதாவது, 'திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. காரணம் திமுக வலிமையாக இருக்கிறது. திமுக வலிமையாக இருப்பதை விட முக்கியமான காரணம் திமுகவை எதிர்க்க எதிர்க்கட்சி என்று ஒன்று இல்லை. திமுகவை தோற்கடிக்கும் தேர்தலாக இருக்காது. திமுகவிற்கு அடுத்து யார் என்பதை முடிவு செய்யும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்' என்றார்.

கஸ்தூரி பேசுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அர்ஜுன் சம்பத் கூட்டத்திலிருந்து எதுவும் சொல்லாமல் அப்படியே பின்னோக்கி சென்றார்.

Next Story

அர்ஜூன் சம்பத்துக்கு மதுரை போலீஸ் சம்மன்

Published on 19/10/2023 | Edited on 19/10/2023

 

Madurai police summon Arjun Sampath

 

சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர். 

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுமதி. இவருடைய கணவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து, சுமதி அந்த பகுதியில் பால்பண்ணை வைத்து வியாபாரம் செய்து வந்தார். 

 

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாலை சுமதி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் சுமதி வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. இதில், அதிர்ச்சியடைந்த சுமதி தனது வீட்டிலேயே மயங்கி விழுந்தார். குண்டு சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விக்கிரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். மேலும், வீட்டிற்குள் மயங்கிய நிலையில் இருந்த சுமதியை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

 

இதற்கிடையில், இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தமிழக அரசை விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து அவரது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “பெருகிவரும் ஆயுதக் கலாச்சாரம்! சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு! திமுக ஆட்சியில் அச்சத்தில் மக்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். 

 

இதையடுத்து,பெட்ரோல் குண்டு சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சுமதிக்கும், அவரது கணவரின் குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறினால் தான் இந்த சம்பவம் நடத்தப்பட்டது என்று தெரியவந்தது. எனவே, குடும்ப தகராறு காரணமாக பெட்ரோல் குண்டு வீசியதை சட்டம் ஒழுங்கு பிரச்சனை போல் பதிவிட்டிருந்த அர்ஜூன் சம்பத்தை, செக்கானூரனி காவல் நிலையத்தில் நாளை நேரில் வந்து ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட எஸ்.பி. சம்மன் அனுப்பி உள்ளார்.