vigilance officers raid at tamilnadu districts government offices seizure the money

Advertisment

தமிழகத்தில் பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் இளநிலை உதவியாளர் நாகராஜனிடம் ரூபாய் 21,000 பணத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல், மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஊழியர் அழகு பாண்டியிடம் இருந்து ரூபாய் 73,000 பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisment

ராணிப்பேட்டை மாவட்டம், மகேந்திரவாடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கணக்கில் வராத ரூபாய் 49,000 ரொக்க பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதனிடையே, சோதனைக்கு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சென்றபோது, மகேந்திரவாடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள அலுவலகத்திலேயே ஊழியர்கள் மது அருந்திக் கொண்டிருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.